அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

புதிய அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது நிச்சயம் அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை தரும் விஷயமாக அமையும்.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

கடந்த மாதம் 11ந் தேதி எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அஸ்டர் என்ற புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த எஸ்யூவி கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாகவும், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலிலும் வந்தது.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

ரூ.9.78 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்த புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவிக்கு துவக்கத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆம், வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவியை போட்டி போட்டி புக்கிங் செய்ததால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நிர்ணயிக்கப்பட்ட 5,000 யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்து போனது.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

அதேநேரத்தில், இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் டெலிவிரி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கார்களின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமி கன்டக்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே வாகன உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவது அறிந்ததே.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

செமி கன்டக்டர் தட்டுப்பாடு காரணமாக அஸ்டர் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால், முதல் லாட்டில் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்ட 5,000 யூனிட்டுகளையும் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய முடியாத நிலைக்கு எம்ஜி மோட்டார் இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

இந்த சூழலில், அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் ஒன்றை எம்ஜி மோட்டார் இந்தியா வர்த்தகப் பிரிவு தலைவர் கவுரவ் குப்தா வெளியிட்டுள்ளார். இதன்படி, அஸ்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.

அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

இருப்பினும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அறிமுகச் சலுகை விலை அடிப்படையிலேயே அனைத்து கார்களும் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்த காரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

 அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

இந்தியாவில் இன்டர்நெட் வசதி மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார்களை களமிறக்க வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அதன்படி, அண்மையில் வந்த அஸ்டர் எஸ்யூவி அந்நிறுவனத்தின் குறைவான விலை எஸ்யூவி மாடலாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருப்பதாலும் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து புக்கிங் செய்தனர்.

 அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

வசதிகள் மற்றும் விலையை பொறுத்து இந்த கார் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரில் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

 அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

இதன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டர்போ பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

 அஸ்டர் எஸ்யூவியை புக்கிங் செய்த வாடிக்கையாளர் வயிற்றில் பாலை வார்த்த எம்ஜி மோட்டார்!

இந்த காரின் சாவி என்ற பெயரில் குறிப்பிடப்படும் அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டில் லெவல் 2 என்ற நவீன தானியங்கி திறன் கொண்ட தொழில்நுட்ப வசதி அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் முன்பின் வரும் வாகனங்களை கணித்து தானியங்கி முறையில் வேகத்தை கட்டுப்படுத்தி செல்லும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, முன்புற மோதல் குறித்த எச்சரிக்கை வசதி, தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் பிரிவன்ஷன் மற்றும் ஸ்பீடு அசிஸ்ட் ஆகிய வசதிகளை ஒருங்கிணைத்து வழங்கும் அடாஸ் பாதுகாப்பு வசதியை பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
MG Motor India's statement on Astor delivery and price production details.
Story first published: Monday, November 22, 2021, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X