Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட்!! இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா?!
எம்ஜி மோட்டாரின் சமீபத்திய அறிமுகமான ஹெக்டர் ப்ளஸ் காரின் லைன்அப்பில் புதிய 'செலக்ட்' வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் அதன் ஹெக்டர், 6-இருக்கை ஹெக்டர் ப்ளஸ் மற்றும் முற்றிலும் புதிய 7-இருக்கை ஹெக்டர் ப்ளஸ் கார்களின் அப்கிரேட் வெர்சன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஹெக்டர் ப்ளஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைகிறதா என்பதை பொறுத்தே அதன் 7-இருக்கை வெர்சனை வெளியிட எம்ஜி திட்டமிட்டது.

அது திட்டமிட்டப்படி 6-இருக்கை ஹெக்டர் ப்ளஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் குவியவே அதன் 7-இருக்கை வெர்சனை அறிமுகப்படுத்திய கையோடு, புதிய ‘செலக்ட்' வேரியண்ட்டையும் எம்ஜி நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய வேரியண்ட்டில் இணையத்தளம் சார்ந்த செயல்பாடுகளை எம்ஜி நிறுவனம் அதிகளவில் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக தற்போது உள்ள இளம் தலைமுறையினரை கவரும் விதத்தில் இண்டர்நெட் வசதிகள் இந்த புதிய ஹெக்டர் ப்ளஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி 360-கோண கேமிரா, மேம்பட்ட்ச் சவுகரியத்திற்காக எலக்ட்ரிக் டெயில்கேட், ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 காற்றுப்பைகள், மழைக்காலத்திலும் சிறப்பான பார்வைக்கு ஏற்ற ஹீட்டட் ஒஆர்விர்எம்-கள், பவர்டு கோ-பயணிகள் இருக்கை உள்ளிட்டவையும் ஹெக்டர் ப்ளஸ்-இன் புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்கள் & வைபர்கள் தானாக இயங்கும் வகையிலும், கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக மடக்கும் வசதி கொண்ட முன் இருக்கைகள் மற்றும் சுற்றுபுற விளக்குகள் போன்றவற்றையும் இந்த புதிய ஹெக்டர் ப்ளஸ் வேரியண்ட் ஏற்றுள்ளது.

இவற்றுடன் காரின் ஐ-ஸ்மார்ட்டையும் எம்ஜி நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 35 ஹிங்லீஷ் உத்தரவுகளை ஐ-ஸ்மார்ட் தொழிற்நுட்பம் மூலம் ஏற்று கார் அதற்கேற்றாற் போல் செயல்படும். புதிய ட்ரிம் நிலையையும் சேர்த்து மொத்தம் 4 விதமான ட்ரிம் நிலைகளில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் இனி விற்பனை செய்யப்படவுள்ளது.

இதில் ஸ்டைல் வேரியண்ட் ரூ.13.44 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.14.76 லட்சம் (டீசல்) என்ற விலையிலும், சூப்பர் வேரியண்ட்கள் ரூ.14.94 லட்சத்தில் இருந்து ரூ.15.86 லட்சம் வரையிலான விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கவுள்ள புதிய ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.17.64 லட்சமாக உள்ளது. புதிய செலக்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை மேற்கூறிய எல்லாவற்றையும் விட அதிகமாக ரூ.18.46 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.