எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டீசர் படங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து எம்ஜி ஒன் எஸ்யூவி கார் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி எஸ்யூவி காரை பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

எம்ஜி பிராண்டின் புதிய கட்டமைப்பில் ஒன் எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்துணர்ச்சியான டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி கார், இவற்றுடன் ‘கட்டிங்-எட்ஜ்' டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் இருக்கும் பொத்தானை அழுத்துவதின் மூலம் இயங்க ஆரம்பிக்கும் இந்த தொழிற்நுட்பம், வாகனத்தின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் கேமிரா, ரேடார் அல்லது சென்சார்களின் உதவியுடன் செயல்படும். அதாவது வாகனம் ஒரே பாதையில் இயங்குவதையும், முன்பக்கத்தில் செல்லும் வாகனங்களுடன் மோதாமல் தவிர்ப்பதையும் உறுதி செய்யும்.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

எம்ஜி ஒன் எஸ்யூவி காரில், படத்தில் பார்ப்பதை போன்று முன்பக்கத்தில் இருந்து மேற்கூரை பின்பக்கத்திற்கு சற்று சாய்வாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இரட்டை நிறங்களில் இந்த எம்ஜி எஸ்யூவி கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்திற்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட முப்பரிமாண க்ரில் கூடுதல் அழகை சேர்க்கிறது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

18 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெற்று வந்துள்ள இந்த எஸ்யூவி வாகனத்தில் ஏகப்பட்ட கஸ்டமைசேஷன் தேர்வுகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வெளிப்பக்கத்தில் எம்ஜி ஒன் எஸ்யூவி மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

இதன் காரணமாக உட்புற கேபினில் நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு இட வசதி கிடைக்கும். மற்றப்படி இந்த எஸ்யூவி காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் அல்லது என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் குறித்த விபரங்கள் எதையும் தயாரிப்பு நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

ஏற்கனவே கூறியதுதான், பிராண்டின் புதிய சிக்மா (SIGMA) கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் உட்புற தொழிற்நுட்ப வசதிகள் 75 சதவீதம் மேம்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன. உட்புற கூடுதல் இட வசதிக்கும் இந்த புதிய கட்டமைப்பு பெரிதும் உதவியாக உள்ளது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

இயந்திரங்கள் மற்றும் நுண்ணறிவின் இணைப்பே சிக்மா என கூறும் எம்ஜி நிறுவனம், இந்த புதிய கட்டமைப்பு வாகனத்தின் குதிரைத்திறன் மற்றும் மென்பொருளின் திறனுக்கு இடையிலான வேறுப்பாடுகளை நிவர்த்தி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

மேலும் சிக்மா ப்ளாட்ஃபாரம், 100க்கும் மேற்பட்ட, பல்வேறு விதமான உடற் அமைப்புகளுடன் கார்களை உருவாக்க அனுமதிக்கிறது என்றும் எம்ஜி நிறுவனம் கூறுகிறது. அதுமட்டுமின்றி எரிபொருள் என்ஜின் கார்கள் உடன் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும் சிக்மா ப்ளாட்ஃபாரம் பயன்படும் என்கிறது எம்ஜி.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

இத்தகைய இயக்குத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள எம்ஜி ஒன் எஸ்யூவி கார் முழுக்க முழுக்க ஐரோப்பிய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெட்லேம்ப்கள், வித்தியாசமான வடிவில் உள்ள க்ரில் உள்ளிட்டவற்றை இந்தியாவில் விற்பனையில் உள்ள எந்தவொரு எம்ஜி காரிலும் பார்க்க முடிவதில்லை.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

உலகளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த எம்ஜி எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் எம்ஜி ஒன் எஸ்யூவி காரில் வழக்கமான 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

அதிகப்பட்சமாக 177.5 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஒன் எஸ்யூவி காரில் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸையும் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.

எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு!! இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுமா?

இந்தியாவில் எம்ஜி ஒன் எஸ்யூவி மாடலுக்கு போட்டியளிக்க ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் உள்ளிட்டவை தயாராக உள்ளன. இந்த போட்டி மாடல்களுக்கு இணையாக எம்ஜி ஒன் காரின் விலையினை எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Mg motors unveiled all new mg one suv based on brands sigma architecture
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X