எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

பச்சை மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

எம்ஜி மோட்டாரின் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காராக ஒன் என்கிற மாடல் மிக விரைவில் வருகிற ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது பச்சை மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

இந்த நிறங்கள் பபுள் ஆரஞ்ச் மற்றும் வனப்பகுதியின் பச்சை என அழைக்கப்படுகின்றன. இந்த படங்களில் காரின் தோற்றத்தை பார்க்கையில், எம்ஜி நிறுவன பொறியியலாளர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தி இந்த எஸ்யூவி காரை வடிவமைத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

பார்ப்பவர்களை கவரும் அதேநேரத்தில் எம்ஜி ஒன் காரின் தோற்றம் மிகவும் எளிமையானதாகவும் நேர்த்தியானதாகவும் உள்ளது. எம்ஜி நிறுவனம் அதன் அடுத்தடுத்த கார்களுக்கு தற்கால மாடர்ன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றப்படி தோற்ற மொழியினை வழங்குவதில் உறுதியாக இருப்பதற்கு ஒன் மிட்-சைஸ் எஸ்யூவியே சாட்சி.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

இந்த அட்டகாசமான ஸ்டைல்கள் அனைத்திற்கும் காரணமாக டங்ஸ்டன் இரும்பு எலக்ட்ரோ மெட்டீரியல் உள்ளது. ஏனெனில் இதன் மூலமாகவே காருக்கும் அதன் டிசைன் லைன்களுக்கும் பளிச்சிடும் தன்மை கிடைத்துள்ளது. இருப்பினும் இவை யாவும் கணிணியில் வரையறுக்கப்பட்ட கிராஃபிக்ஸே ஆகும்.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

எம்ஜி ஒன் இறுதிக்கட்ட வடிவமைப்பு பணிகளில் உள்ளது. இவை முடிந்த பிறகே காரின் நிஜ உலக படத்தை பார்க்க முடியும். இணைப்பு கார்கள் என்கிற தொழிற்நுட்ப அம்சத்தை முக்கியமான ஹைலைட்டாக முன்னுறுத்தி எம்ஜி ஒன் கொண்டுவரப்படுகிறது.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

ஆனால் உண்மையில் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் உள்ள கண்டத்தில், இணைய வசதி மற்றும் தரவுகள் போன்றவற்றை மற்ற கார்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி பெரும்பான்மையான கார்களில் கொண்டுவரப்பட்டுவிட்டது.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

இதனால் இவ்வாறான தொழிற்நுட்பம் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவுள்ள காரில் வழங்கப்பட உள்ளது என்பது ஒன்றும் ஆச்சிரியமில்லை. ஆனால் இவ்வாறான தொழிற்நுட்ப வசதிகள் நமக்கு புதியவை. இவை நமது கார் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றிவிடக்கூடியவை.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

இதனுடன் ஆற்றல்மிக்க சிப் தொழிற்நுட்பம், ஆக்டிவ் டிஜிட்டல் சூழல் அமைப்பு மற்றும் அதிநவீன எலக்ட்ரிக் கட்டமைப்பை எம்ஜி ஒன் பெற்றுவரவுள்ளது. எம்ஜி ஒன் நடுத்தர-அளவு எஸ்யூவி காரை பற்றிய முழு விபரம் அதன் உலகளாவிய அறிமுகத்தின் போது வெளியிடப்படவுள்ளன.

எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு!! பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது

எம்ஜி ஒன் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த என்ஜின்களை பற்றிய விபரங்கள் தற்போதைக்கு இல்லை. இந்தியாவில் எம்ஜி ஹெக்டரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் என்ஜின் புதிய ஒன் எஸ்யூவியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MG One SUV Officially Unveiled In Green And Orange Colour Options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X