Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 3 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம ஸ்பீடா எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஆகும்... சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு...
சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக எம்ஜி மோட்டார் நிறுவனமும், டாடா பவர் நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன என்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த 2 நிறுவனங்களின் கூட்டணியில் இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் மற்றும் டாடா பவர் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தமிழக தலைநகர் சென்னையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைக்கப்பட்டிருப்பது, 50 kW சூப்பர் ஃபாஸ்ட் பொது சார்ஜிங் ஸ்டேஷன் ஆகும். எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இதுதவிர வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான திட்டமும் எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் உள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 50 kW மற்றும் 60 kW டிசி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது சென்னையில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், பெங்களூர், அகமதாபாத், நாக்பூர், மங்களூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏற்கனவே சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்ஜி மோட்டார் மற்றும் டாடா பவர் போன்ற அதன் கூட்டணி நிறுவனங்கள் தற்போது வரை இந்தியாவின் 17 நகரங்களில் 22 சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளன.

சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2021 மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் போட்டியிட்டு வருகிறது. ஹூண்டாய் கோனாவை தவிர எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நேரடி போட்டி என எந்த மாடலும் தற்போதைக்கு இல்லை. எனினும் வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் நிறைய எலெக்ட்ரிக் கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.