நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்! MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ

MG Astor காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு அம்சம்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம்.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

இந்தியாவில் பண்டிகைக் காலம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், எம்ஜி (MG) நிறுவனம், அதன் ஆஸ்டர் (Astor) காரை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

மிக சமீபத்திலேயே இக்காரை நிறுவனம் வெளியீடு செய்தது. செப்டம்பர் 15ம் தேதி அன்றே இந்த நிகழ்வை நிறுவனம் இந்தியாவில் அரங்கேற்றியது. இதனைத் தொடர்ந்து மிக விரைவில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங்கையும் நிறுவனம் நாட்டில் தொடங்க இருக்கின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

இந்த நிலையில், ஆஸ்டர் காரின் பக்கம் மக்களைக் கவரும் வகையில் நிறுவனம் பிரத்யேக விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வீடியோவில் ஆஸ்டர் கார் தானாக பிரேக் பிடித்து நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை எந்தவொரு காரிலும் இடம் பெறாத பல முக்கிய சிறப்பு அம்சங்களுடன் எம்ஜி ஆஸ்டர் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

மிக முக்கியமாக லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக கிடைக்கக் கூடிய ஓர் பிரத்யேக வசதியே தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம். இது ஆபத்து நேரங்களில் தானாகவே செயல்படும். அதாவது, மோதல் போன்ற அசம்பாவித நேரங்களில் தானாக செயல்பட்டு காரை நிறுத்தும் வசதி.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

இந்த அம்சத்தை விளக்கக் கூடிய ஓர் வீடியோவை நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. இந்தியாவில் அடாஸ் வசதி உடன் ஒரு சில கார்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே அடாஸ் வசதியை குறிப்பிட்ட சில கார் மாடல்களில் வழங்கி வருகின்றது. அவற்றின் விலை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி700 காரிலும் இந்த வசதி இடம் பெற இருப்பது கவனிக்கதகுந்தது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

எம்ஜி ஆஸ்டர் ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இத்துடன், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறத் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், இந்த கார் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

அதேவேலையில், 1.5 லிட்டர் விடிஐ நேட்சுரல்லி அஸ்பயர்டு மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் தேர்வுகளில் அது கிடைக்கும். இதில், விடிஐ பெட்ரோல் எஞ்ஜின் 110 எச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டர்போசார்ஜட் எஞ்ஜின் 140 எச்பியையும், 220 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

எம்ஜி ஆஸ்டர் காரில் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி அவசர கால பிரேக்கிங் வசதி, லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வார்டு கொளிசன் வார்னிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. இத்துடன், பாதுகாப்பு வசதிக்காக 6 ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் இடம் பெற இருக்கிறது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

மேலும், 7 இன்சிலான எம்ஐடி எல்சிடி திரை, 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்), நேவிகேஷன் வசதி, பார்க் ப்ளஸ் உள்ளிட்ட வசதிகளும் எம்ஜி ஆஸ்டர் காரில் இடம் பெற இருக்கின்றன. எம்ஜி ஆஸ்டர் கார் ரூ. 8 லட்சம் தொடங்கி ரூ. 13 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நீங்க கவனிக்கலைனாலும் பரவா இல்லை... அதுவே பிரேக் பிடிச்சுடும்... MG Astor காரின் தரமான அம்சத்தை விளக்கும் வீடியோ!

இந்த குறைவான விலையிலேயே அடாஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை நிறுவனம் ஆஸ்டர் காரில் வழங்க இருக்கின்றது. இக்கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுவான் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.

எம்ஜி ஆஸ்டர் காரில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை பட்டியலாகக் கீழே பார்க்கலம்:

  • 80-க்கும் மேற்பட்ட இணைய வழியிலான சேவைகள்.
  • கண் வடிவிலான எல்இடி மின் விளக்குகள், 17 இன்ச் இரு வண்ண அலாய் வீல்கள்.
  • 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய பவர் வசதிக் கொண்ட இருக்கை
  • நார்மல், அர்பன் மற்றும் டைனமிக் ஆகிய அட்ஜெஸ்ட்மென்ட் வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல்
  • 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர்
  • பனோரமிக் சன்ரூஃப் (65 இன்ச் கொண்டது. இதன் வாயிலாக பார்க்கையில் முழுமையாக வானத்தைக் காண முடியும்)
  • பிஎம் 2.5 ஃபில்டர் (காற்றை சுத்தப்படுத்த இது உதவும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்க உதவும்.)
  • எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்
  • சூடான ORVM
  • ப்ளூடூத் வசதி கொண்ட டிஜிட்டல் சாவி
Most Read Articles
English summary
Mg reveals new tvc for astor video highlighted automatic braking feature
Story first published: Wednesday, September 22, 2021, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X