அட்ராசக்கை... ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

இந்திய சந்தையில் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பை பெற்ற கார் பிராண்டாக மாறி இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மிக வலுவாக மாறி வருகிறது. இதனால், பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் உள்ளது. டாடா, மஹிந்திரா, எம்ஜி மோட்டார், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு களமிறக்கிவிட்டன.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் ரூ.10 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் இதுவரை சிறப்பான எலெக்ட்ரிக் கார் மாடல் இல்லாத நிலை இருக்கிறது. இந்த குறையை போக்கி, வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரிக்கும் திட்டத்தை எம்ஜி மோட்டார் எடுத்துள்ளது.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூ.20 லட்சம் பட்ஜெட்டை தாண்டுகிறது. இந்த நிலையில், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது,"அஸ்டர் எஸ்யூவியை தொடர்ந்து அடுத்ததாக எலெக்ட்ரிக் காரை களமிறக்குவதற்கு உத்தேசித்துள்ளோம்.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

அடுத்த நிதி ஆண்டு காலத்தின் முடிவில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க முடிவு செய்துள்ளோம். இந்த கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் விலை கொண்டதாக இருக்கும்.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

புதிய எலெக்ட்ரிக் கார் எங்களது உலக அளவிலான கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும். இது க்ராஸ்ஓவர் பாடி ஸ்டைல் கொண்ட மாடலாகவும் இருக்கும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு தக்கவாறு இந்த காரில் மாறுதல்கள் செய்து களமிறக்க உள்ளோம். அதிக அளவில் உள்நாட்டு பாகங்களுடன் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான விலையில் வரும் இந்த கார் விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கை பெறும் என்று நம்புகிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

மேலும், இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் குறித்து குறிப்பிடுகையில்,"தற்போது இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு 2,000 மேற்பட்ட புக்கிங்குகள் டெலிவிரி கொடுக்க வேண்டி இருக்கிறது. செமி கன்டக்டர் பற்றாக்குறை காரணமாக, மாதத்திற்கு 250 முதல் 300 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

வரும் பிப்ரவரி மாதம் முதல் உற்பத்தியை அதிகரிக்க உள்ளோம். மாதத்திற்கு 500 முதல் 600 யூனிட்டுகள் என்ற அளவில் இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம்," என்றும் கூறி இருக்கிறார்.

அட்ராசக்கை... ரூ.10 லட்சத்தில் புதிய எலெக்ட்ரிக் கார்... அதிரடி திட்டத்தை அறிவித்த எம்ஜி மோட்டார்!

சிறந்த டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, அந்நிறுவனம் களமிறக்க உள்ள புதிய எலெக்ட்ரிக் கார் விலை குறைவானதாக இருக்கும் என்பதால் அதிக வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.

குறிப்பு: மாதிரிக்காக எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
MG to Launch Mass Market Electric Car By End Of Next Fiscal.
Story first published: Thursday, December 9, 2021, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X