சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

2022 எம்ஜி இசட்.எஸ் இவி 437கிமீ ரேஞ்சில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் மூலம் இந்திய சந்தையில் கடந்த 2019இல் நுழைந்தது. அதன்பின் இரண்டாவது எம்ஜி மாடலாக இசட்.எஸ் இவி கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இந்த இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் பெட்ரோல் வெர்சன் தான் அஸ்டர் என்கிற பெயரில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவற்றை தொடர்ந்து ஹெக்டரின் 6-இருக்கை மற்றும் 7-இருக்கை வெர்சன்கள் இந்த 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் அப்டேட் வெர்சன் இந்தியாவில் அடுத்த 2022இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள ஹூண்டாய் கோனா இவி-யும் அடுத்த ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்டினை பெறும் என தெரிகிறது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இந்த நிலையில் தான் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 2022 இசட்.எஸ் எலக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்கள் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் வாகனத்தின் ட்ரைவ்ட்ரெயினும் மேம்பட்டுள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

அப்டேட் செய்யப்பட்ட இசட்.எஸ் இவி-யின் முன்பக்க க்ரில்லின் டிசைனை எங்கோ பார்த்தது போன்று நினைவிருக்கலாம். விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள அஸ்டரில் இத்தகைய க்ரில் அமைப்பு தான் வழங்கப்பட உள்ளது. ஆனால் எலக்ட்ரிக் கார் என்பதால், புதிய இசட்.எஸ் இவி-யில் க்ரில் ஒருபக்க மூடப்பட்டும், மறுப்பக்கத்தில் சிறிது திறந்தும் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல் உடன் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள், வழக்கமான இடத்தில் இருந்து சற்று மாற்றியமைக்கப்பட்ட சார்ஜிங் துளை மற்றும் மறுவேலை செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்டவை 2022 எம்ஜி இசட்.எஸ் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இவை மட்டுமின்றி அப்டேட் செய்யப்பட்ட பின்பக்க பம்பர் & எல்இடி டெயில்லேம்ப்களை புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் உடன் பார்க்க முடிகிறது. வெளிப்புறத்திற்கு ஏற்ப காரின் உட்புற கேபினின் தோற்றமும் மெருக்கேற்றப்பட்டுள்ளது. புதிய இசட்.எஸ் இவி-யின் உட்புற டேஸ்போர்டில் 10.1 இன்ச்சில் பெரிய அளவிலான தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கும் வசதி உடன் வழங்கப்பட்டுள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி மற்றும் அதிநவீன ஐ-ஸ்மார்ட் இணைப்பு வசதியும் புதிய எம்ஜி இசட்.எஸ் உட்புறத்தில் பெற்று வந்துள்ளது. இதில் ஐ-ஸ்மார்ட் இணைப்பு வசதியானது மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் உடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

உட்புற கேபினின் க்ளைமேட்டை கண்ட்ரோல் செய்ய ரிமோட் செயல்பாடுகளை புதிய இசட்.எஸ் மாடலில் எம்ஜி அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் காரின் பாதுகாப்பு மற்றும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எம்ஜி இசட்.எஸ் இவி-யின் வழக்கமான ஆரம்ப நிலை பேட்டரி தேர்வான 44.5 kWh பேட்டரிக்கு பதிலாக 51 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இது அதிகப்பட்சமாக 317கிமீ வரையிலான ரேஞ்ச்சை சிங்கிள் சார்ஜில் வழங்கக்கூடியது. அதேநேரம் 72kWh பேட்டரி தேர்வும் 2022 இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 437கிமீ தூரத்திற்கு சிங்கிள் சார்ஜில் செல்லலாம் என்கிறது எம்ஜி மோட்டார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இசட்.எஸ் இவி-இல் பொருத்தப்படும் ஒரே தேர்வான 44.5 kWh பேட்டரி 419கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இசட்.எஸ் மாடலின் அப்டேட் வெர்சனில் இந்த பேட்டரிக்கு மாற்றாக புதிய 51 kWh பேட்டரி வழங்கப்பட்டுவிடும். ஆனால் பெரிய 72 kWh பேட்டரி தேர்வு நம் இந்திய சந்தையில் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுமார் 437கிமீ ரேஞ்ச் உடன் 2022 எம்ஜி இசட்.எஸ் இவி வெளியீடு!! 2022இல் இந்தியாவில் அறிமுகம்

இந்த, அளவில் பெரிய பேட்டரியை 7 கிலோவாட்ஸ் மாறுதிசை மின்னோட்ட சார்ஜரின் மூலம் 100% சார்ஜ் ஏற்ற கிட்டத்தட்ட 10 மணிநேரங்கள் 30 நிமிடங்கள் தேவைப்படுமாம். அதுவே 100 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட சார்ஜரின் மூலம் வெறும் 42 நிமிடங்களில் இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் ஏற்றிவிடலாமாம்.

Most Read Articles
English summary
New 2022 MG ZS Facelift Unveiled.
Story first published: Sunday, October 10, 2021, 22:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X