எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அருமையான டிசைன், சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் மிகச் சரியான விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், எம்ஜி நிறுவனத்திடம் இருந்து அடுத்து ஒரு புதிய கார் மாடல் விரைவில் வர இருக்கிறது. அதுவும் கூட எஸ்யூவி வகை மாடல்தான். ஆம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விரைவில் இந்தியாவில் வர இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வைத்து எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடல் தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு மத்தியில், அதாவது மே மாதத்தையொட்டி எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன், எலெக்ட்ரிக் மாடலிலும் இந்த கார் விற்பனையில் இருக்கிறது. இதனால், இந்த மாடலின் டிசைன் இந்தியர்களுக்கு பரிட்சயமாகிவிட்டது. பரிமாணத்தில் கூட எந்த வித்தியாசமும் இருக்காது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடலில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது 1.5 லிட்டர் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இரண்டாவது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடலில் கூடுதலாக பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வாய்ஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் என்ட்ரி வசதி, ரிமோட் கன்ட்ரோல் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் அறிமுகம் எப்போது?

புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடலில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

Via - Carwale

Most Read Articles
English summary
MG Motor is planning to launch ZS petrol model in India by mid of this year.
Story first published: Friday, February 12, 2021, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X