அதிக பாதுகாப்பு திறன் கொண்டது! இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு

மறைப்புகளுடன் இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் மூலம் காரில் இடம்பெற இருக்கும் பல்வேறு சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைய இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் எம்ஜி நிறுவனம் புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. அத களமிறக்க திட்டமிருக்கும் கார்களின் பட்டியலில் எம்ஜி இசட்எஸ் காரும் ஒன்றாகும். விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் இக்காரை தீவிர பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

அவ்வாறு இந்தியாவின் குறிப்பிட்ட நகரத்தின் சாலையில் வைத்து இக்காரை பரிசோதனைச் செய்தபோது கேமிராவின் சிக்கியிருக்கின்றது. இந்த புதிய புகைப்படத்தின் மூலம் காரில் இடம்பெற இருக்கும் சிறப்பு அம்சம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. இந்த வசதி தற்போது விற்பனையில் இருக்கும் புதுமுக கார் கியா செல்டோஸ் மற்றும் க்ரெட்டா ஆகியவற்றில் இல்லாத ஓர் வசதி என கூறப்படுகின்றது.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) ரேடார் மோடுல் எனும் சிறப்பு வசதியையே எம்ஜி இசட் எஸ் கார் பெற இருக்கின்றது. இது டிரைவரே இல்லாமல் காரை இயக்க உதவும் சிறப்பு தொழில்நுட்ப வசதியாகும். இந்த வசதியையே செல்டோஸ் மற்றும் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் எம்ஜி இசட்எஸ் காரில் தயாரிப்பு நிறுவனம் வழங்க இருக்கின்றது.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

அடாஸ் ரேடார் மோடுல் தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கி ஓட்டுநர் வசதி மட்டுமின்றி அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் தானியங்கி பிரேக்கிங் வசதியையும் பெற முடியும். இத்துடன், தானியங்கி பார்க்கிங், மோதல் எச்சரிக்கை, பிளைன்ட் ஸ்பாட் எச்சரிக்கை போன்ற சில தனித்துவான தானியங்கி செயல்பாடுகளையும் இந்த தொழில்நுட்பத்தின்மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

இந்த மாதிரியான சிறப்பு வசதிகளைக் கொண்டு இக்கார் களமிறங்க இருக்கின்ற காரணத்தினாலயே கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றன. இக்காரை இந்த வருடத்தின் இறுதிக்குள் எம்ஜி களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய வாகன பிரியர்களின் எதிர்பார்ப்பு இந்த காரை நோக்கியே இருக்கின்றது.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

Source: Rushlane Spylane

இந்த காரில் அடாஸ் தொழில்நுட்ப வசதி மட்டுமே சிறப்பு வசதி இல்லைங்க இது மிக சிறந்த பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். அண்மையில் ஏசியன் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதற்கு கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பதே பொருள் ஆகும்.

அதிக பாதுகாப்பு திறன் கொண்டது... இந்திய சாலையில் வலம் வந்த எம்ஜி இசட்எஸ்... புதிய ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கு!!

இதுவும், இந்தியர்களின் கவனத்தைக் கவர ஓர் காரணமாக இருக்கின்றது. இக்காரை எம்ஜி நிறுவனம் இசட்எஸ் காரை மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே எரிபொருள் எஞ்ஜின் தேர்வை வழங்கும் விதமாக எம்ஜி நிறுவனம் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட இசட்எஸ் காரை களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
MG ZS Petrol Spied With ADAS Radar Module. Read In Tamil.
Story first published: Monday, January 4, 2021, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X