எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

எம்ஜி இஸட்எஸ் பெட்ரோல் மாடலுக்கு புதிய பெயர் சூட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

இஸட்எஸ் (ZS) காரின் பெட்ரோல் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் தயாராகி வருகிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், எம்ஜி இஸட்எஸ் பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

இந்த சூழலில், இஸட்எஸ் காரின் பெட்ரோல் வெர்ஷனுக்கு புதிய பெயர் சூட்டப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஹெக்டர் எஸ்யூவிக்கு கீழாக இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படவுள்ளது. எனவே இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காராக இது இருக்கும்.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடிப்படையில், இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்படுகிறது. இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் இந்த புதிய மாடல் கிடைக்கும். அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கலாம்.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

புதிய எம்ஜி இஸட்எஸ் பெட்ரோல் மாடல், ஹெக்டர் எஸ்யூவியை விட குறைவான நீளம் கொண்டது. இதன் நீளம் 4.3 மீட்டர்கள் மட்டும்தான். ஆனால் ஹெக்டர் எஸ்யூவியின் நீளம் 4.6 மீட்டர்கள். அதே சமயம் எலெக்ட்ரிக் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் வெர்ஷனின் டிசைனில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

இந்த புதிய மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படலாம். அதே சமயம் எம்ஜி நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை போலவே, இஸட்எஸ் பெட்ரோல் மாடலிலும் ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும். இதன்படி ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஐஸ்மார்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளுடன், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஏர் ப்யூரிஃபையர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி... புதிய பெயருடன் விற்பனைக்கு வருகிறது இஸட்எஸ் பெட்ரோல்?

எம்ஜி இஸட்எஸ் பெட்ரோல் தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டபோது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. 10 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில், இஸட்எஸ் பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG ZS Petrol To Get A New Name - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, February 17, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X