ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

புதிய முன்புறம் மற்றும் கூடுதல் தொழிற்நுட்பங்களுடன் 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு செல்லவுள்ள இந்த 2021 மினி காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

நடைமுறைக்கு இன்னும் உகந்த வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய 5-கதவு ஹேட்ச்பேக் கார் ‘பிரெஞ்சு-தாடி' ஸ்டைலில், ரீடிசைனில் முன்பகுதி உடன் மினி லைன்-அப்பில் முதன்முறையாக பல-நிற மேற்கூரையை பெற்றுவந்துள்ளது.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

மினி 3-கதவு ஹேட்ச்பேக் உடன் ஒப்பிடும்போது புதிய 5-கதவு மினி கார் 72மிமீ நீளமான வீல்பேஸ் மற்றும் 160மிமீ அதிகரிக்கப்பட்ட நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலை பொறுத்தவரையில், 2021 5-கதவு மினி கார் முன்பக்க எண்கோண ரேடியேட்டர் க்ரில் மற்றும் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்களை ஏற்றுள்ளது.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

மூடுபனி விளக்குகளின் இடத்தை பெரிய சதுரமான காற்று ஏற்பான்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றுடன் அடாப்டிவ் எல்இடிகளையும் கூடுதல் தேர்வுகளாக வாடிக்கையாளர்கள் பெறலாம். பின்பக்க ஹெட்லைட்கள் வழக்கம்போல் மினி அடையாள நேர்த்தியான ‘ஜாக்' டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

இதன் மேற்கூரையை வெள்ளை நிறத்திற்கு மாற்றாக மூன்று நிறங்களுடனும் பெறலாம். மேலும் அந்த மூன்று நிறங்களை வாடிக்கையாளர்களே தனிபயனாக்க பெயிண்ட் திட்டத்தின்படி தேர்வும் செய்யலாம். உதாரணத்திற்கு, மேற்கூரையை மூன்றாக பிரித்து அதன் முன்பகுதியை சான் மரினோ நீல நிறத்திலும், மத்திய மற்றும் பின்பகுதியை பேர்ல் அக்வா மற்றும் ஜெட் கருப்பு நிறத்திலும் பெறலாம்.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

இந்த மூன்று நிறங்களும் தனித்தனியாக தெரியாமல், ஒன்றில் இருந்து மற்றொன்று வருவதுபோல் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல-நிற மேற்கூரை தேர்வு காரின் அனைத்து பெயிண்ட் தேர்வுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

உட்புறத்தில் அட்வான்ஸான காக்பிட் டிசைன் மற்றும் 8.8 இன்ச்சில் தொடுத்திரை உடன் மறுவேலை செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என சவுகரியமான வசதிகளை புதிய 5-கதவு மினி கார் பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ் லெதர் ஸ்டேரிங் சக்கரம் ஆனது ஹீட்டிங் தேர்வுடன் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

உட்புறத்தில் மிக முக்கிய மாற்றமாக கேபினின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கால் வைக்கும் பகுதி மற்றும் தலைப்பகுதிகள் சற்று விசாலமாகியுள்ளன. இரண்டாவது இருக்கை வரிசையில் மூன்று இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?

இந்த இருக்கை வரிசையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கினால் பின்புறத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 278 லிட்டர்களில் இருந்து 941 லிட்டர்களாக அதிகரிக்கும். முன்பே கூறியதுபோல் இந்த மார்ச் மாதத்தில் இருந்து ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையை துவங்கவுள்ள 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் இந்தியாவிற்கு வருகை தர வாய்ப்புள்ளது, ஆனால் அதற்கு சில காலம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
2021 Mini 5-door gets newer fascia and additional equipment
Story first published: Sunday, February 28, 2021, 23:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X