வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

புக்கிங் தொடங்கப்பட்ட ரெண்டே மணி நேரத்தில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து யூனிட் மினி கூப்பர் எஸ்இ (Mini Cooper SE) எலெக்ட்ரிக் கார்களும் புக் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிகழ்வுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மினி இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராக கூப்பர் எஸ்இ காரை மிக விரைவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மிக விரைவில் இதன் வருகை அமைய இருப்பதை முன்னிட்டு நேற்றைய தினம் (அக்டோபர் 29) மின்சார காருக்கான புக்கிங் பணிகளை மினி நிறுவனம் இந்தியாவில் தொடங்கியது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இக்காரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது. ஆகையால், மினி கார் பிரியர்கள் மத்தியில் இக்காரை புக் செய்வதில் போட்டி ஏற்பட்டது. இதன் விளைவாக புக்கிங் தொடங்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் நிறுவனம் இந்தியாவிற்காக ஒதுக்கி வைத்திருந்த அனைத்து யூனிட் மினி கூப்பர் எஸ்இ கார்களுக்கும் புக்கிங் செய்யப்பட்டு இருக்கின்றன.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

மினி நிறுவனம் முதல் லாட்டிற்காக 30 யூனிட் கூப்பர் எஸ்இ மின்சார கார்களை ஒதுக்கி வைத்திருந்தது. இவை அனைத்திற்கும் இரண்டே மணி நேரங்களுக்குள் புக்கிங் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

இது மினி நிறுவத்திற்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, இந்த அமோக வரவேற்பை வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு மினி நிறுவனம் சமூக வலைதளம் பக்கம் வாயிலாக நன்றியைத் தெரிவித்திருக்கின்றது. மினி கூப்பர் எஸ்இ மின்சார காருக்கு கிடைத்திருக்கும் இந்த அமோக வரவேற்பு, இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதை வெளிக்காட்டி உள்ளது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

மேலும், இது இன்னும் பல நிறுவனங்களை புதுமுக மின்சார வாகனங்களைக் களமிறக்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூ. 1 லட்சம் முன் தொகையில் மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருக்கான ப்ரீ புக்கிங் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

இது ஓர் மூன்று சக்கரங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக மினி கூப்பர் எஸ்இ மின்சார கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. முற்போக்கான டிசைன் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் என இக்கார் ஜொலிப்பதை நம்மால் காண முடிகின்றது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

மினி நிறுவனம் கூப்பர் எஸ்இ மின்சார காரில் 32.6 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பைப் பயன்படுத்தியுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இக்காரில் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடிய மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

இந்த மின் மோட்டார் அதிகப்பட்சமாக 184 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. உச்சபட்சமாக கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் மணிக்கு 150 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. புதிய மினி கூப்பர் எஸ்இ மின்சார கார் வெள்ளை சில்வர், மிட்நைட் கருப்பு, நிலவின் சாம்பல் நிறம் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் ஆகிய நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

இந்த எலெக்ட்ரிக் காரை 11kW சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத வரை சார்ஜை பெற 2.5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இதுவே, 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் 35 நிமிடங்களிலேயே 80 சதவீத சார்ஜை பெற்றுக் கொள்ள முடியும்.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

இதனை வழக்கமான கூப்பர் மாடலில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வைப்பதற்காக லேசான மாற்றங்களை மினி செய்துள்ளது. அந்தவகையில் மஞ்சள் நிற கூடுதல் அணிகலன் காரின் உட் மற்றும் வெளிப்புறங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், புதிய தோற்றத்திலான 17 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெறிகொண்டு காத்திருந்ததை போல ரெண்டே மணி நேரத்தில் அனைத்து யூனிட்டையும் புக் செய்த இந்தியர்கள்! செம்ம ஸ்பீடு!

தொடர்ந்து, ஆந்தை கண் வடிவிலான முகப்பு மின் விளக்கு மற்றும் டிஆர்எல்கள், அறுகோண வடிவிலான க்ரில், அடர் கருப்பு நிற உட்பக்கம், துணி மற்றும் உயர் தரத்திலான நப்பா லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள், டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் உள்ளிட்ட நவீன கால அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Mini cooper se all unit pre booked with in 2 hours
Story first published: Saturday, October 30, 2021, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X