மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக அதிகரித்து வருகிறது. அது ஸ்கூட்டராக இருந்தாலும், சொகுசு கார் மாடலாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த மினி கார் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் தனது முதல் சொகுசு கார் மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதமே புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும முயற்சியாக டீசரை வெளியிட்டது.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

அத்துடன், புதிய மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவும் இந்தியாவில் துவங்கப்பட்டது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் புக்கிங் துவங்கியது. முதல் லாட்டில் 30 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த அனைத்து கார்களும் சில மணிநேரங்களில் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த நிலையில், இந்த கார் முறைப்படி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதன்படி, வரும் மார்ச் மாதம் மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் காரில் 32.6kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், 270 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும்.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த காருக்கு 11kW மற்றும் 50kW சார்ஜர்கள் கொடுக்கப்படும். இதில், சாதாரண சார்ஜர் பயன்படுத்தினால், 0 - 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு 2.5 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 35 நிமிடங்களும் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

மினி கார் பிராண்டின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தகம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து பல மாடல்களை வரிசைக் கட்ட உள்ளது. அந்த வகையில், நாளை மறுதினம் ஐஎக்ஸ் என்ற முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எப்போது? - அதிகாரப்பூர்வ தகவல்!

இதைத்தொடர்ந்து, மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காரையும், ஐ4 எலெக்ட்ரிக் செடான் காரையும் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று கார்களும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Mini Cooper SE electric Car India Launch Details.
Story first published: Saturday, December 11, 2021, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X