இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

மினி பட்டி ஹாப்கிர்க் எடிசன் ரூ.41.70 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மினி காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வெறும் 15 யூனிட்கள் மட்டுமே புதிய மினி பட்டி ஹாப்கிர்க் கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

காருக்கு பட்டி என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. 1964ல் நடைபெற்ற மாண்டே கார்லோ ராலி போட்டியில் மினி கூப்பர் எஸ் மாடலை இயக்கி பாட்ரிக் பட்டி ஹாப்கிர்க் என்பவர் வெற்றி பெற்றார். அவரது நினைவாகவே இந்த காரின் பெயரில் பட்டி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

இதைதான் பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியாவின் தலைவர் விக்ரம் பவாவும் தெரிவித்துள்ளார். மிளகாயின் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த மினி காரில் மேற்கூரை வெள்ளை நிற பார்டருடன் மத்தியில் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

ஆனால் காரின் மேற்புறத்தை தவிர்த்து எந்த பக்கத்தில் நின்று பார்த்தாலும், மேற்கூரை வெள்ளை நிறம் என்பதுபோல்தான் காட்சிதரும். அலாய் சக்கரங்கள் காருக்கு ஏற்றாற்போல் சிறியதாக 16 இன்ச்சில் பியானோ கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

காரின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் 37 என்ற எண்ணின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல் 37 என்ற லோகோ காரின் சாவியிலும் வழங்கப்பட்டுள்ளது. 37 என்ற எண் அந்த மாண்டே கார்லோ ராலி போட்டியில் மினி கூப்பர் எஸ் கார் கொண்டிருந்த எண்ணாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

கதவுகளுக்கு கீழே கால் வைத்து காருக்குள் நுழையும் பகுதியில் பயணிகளை வரவேற்கும் விதமாக ஒளியூட்டப்பட்ட சில்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் பொனெட்டில் உள்ள வெள்ளை ஸ்டிக்கரிலும் மற்றும் பின்பக்கத்தில் டெயில்லேம்பிற்கு அருகிலும் பட்டி ஹாப்கிர்கின் கையெழுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

இவற்றுடன் மினி பட்டி ஹாப்கிர் எடிசன் பனோராமா கண்ணாடி மேற்கூரை, பின்புறத்தை காட்டும் கேமிரா மற்றும் ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஸ்போர்ட் லெதர் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இரட்டைபவர் டர்போ தொழிற்நுட்பத்துடன் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

ட்ரான்ஸ்மிஷன் பணிகளை கவனிக்க 7-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் யூனிட் ஆனது இரட்டை க்ளட்ச் & பெடல் ஷிஃப்டர்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மினி கார் அதிகப்பட்சமாக மணிக்கு 235கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மினி கார்!! விலை ரூ.41.70 லட்சமாம்...

ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட் மற்றும் சிறந்த எரிபொருள் திறனிற்கு க்ரீன் என்ற வெவ்வேறான ட்ரைவ் மோட்களை பெற்றுவந்துள்ள மினி பட்டி ஹாப்கிர்க் எடிசனில் பயணிகளின் பாதுகாப்பிற்கு வழக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், க்ராஷ் சென்சார் மற்றும் ரன்-ஃப்ளாட் இண்டிகேட்டர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
The MINI Paddy Hopkirk Edition launched in India.
Story first published: Thursday, January 7, 2021, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X