முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

மினி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் காராக இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ள கூப்பர் எஸ்.இ மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த மினி எலக்ட்ரிக் கார் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் நம் இந்தியா இன்னும் ஆரம்ப கட்ட நிலையில் தான் இருந்தாலும், எதிர்காலத்தில் நம் நாட்டிலும் சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிகளவில் செல்லும் என்பது உறுதி.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

இதற்கு ஒரு அடித்தளமாகவே மினி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் முதல் எலக்ட்ரிக் காராக கூப்பர் எஸ்.இ மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இன்று (அக்.29) முதல் துவங்கப்பட்டுள்ளன. இந்த முன்பதிவிற்கான டோக்கன் தொகையாக ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

மினி நிறுவனம் சிறிய அளவிலான பிரீமியம் ரக பிராண்டாக ஓரளவிற்கு இந்திய சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள்து. தற்சமயம் நம் நாட்டில் மினி பிராண்டில் இருந்து மினி 3-கதவு ஹேட்ச், மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹாட்ச், மினி கன்வெர்டபிள் மற்றும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மினி கண்ட்ரீமேன் என்பவை விற்பனை செய்யப்படுகின்றன.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் செயல்படும் மினி நிறுவனத்திற்கு இந்தியாவில் டெல்லி என்சிஆர், புனே, கொச்சி, அஹமதாபாத், மும்பை, சண்டிகர், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 9 டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. முதல் மினி எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா கருத்து தெரிவிக்கையில், புதிய மினி 3-கதவு கூப்பர் எஸ்.இ ஆனது இந்தியாவின் முதல் அனைத்து-எலக்ட்ரிக் பிரீமியம் ரக சிறிய காராகும்.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

இது நிலையான அதேநேரத்தில் மிகவும் உணர்ச்சிகரமான ஓட்டுநர் அனுபவத்திற்கு வழிவகுக்கும். முன்பதிவு செய்வதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும், மினி ரசிகர்களும் டெலிவிரி பெறுவதற்கு முன்பே டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். இந்தியாவின் முதல் முழு-எலக்ட்ரிக் மினி கார் இதுதான் என கூறியுள்ளார்.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

முற்போக்கான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள மினி கூப்பர் எஸ்.இ நகர்புறத்திற்கு ஏற்ற காராகும். நகர்புற சாலையிலும் எவர் ஒருவரையும் வசீகரித்துவிடும் தோற்ற கொண்ட இது 3-கதவுகள் கொண்ட பிரீமியம் காராகும். ஆந்தை கண் வடிவிலான ஹெட்லைட் & டிஆர்எல்களுடன் இதன் முன்பக்க அறுகோண க்ரில் அமைப்பில் ஃப்ரேம் மற்றும் காரின் உடல் நிறத்தில் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

அலாய் சக்கரங்கள் அளவில் சிறியதாக, நேர்த்தியான சதுர டிசைன்களுடன் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் அடர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேபினில் இருக்கைகள் துணி மற்றும் உயர்தரத்திலான நப்பா லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட, இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை ஆனது 8.8 இன்ச்சில் டேஸ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

இதில் 32.6 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகின்றது. இது அதிகப்பட்சமாக 184 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் உதவியுடன் சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக இந்த காரில் 270கிமீ தூரத்திற்கு இயங்கலாம். 0-வில் இருந்து 100 kmph வேகத்தை இந்த மினி எலக்ட்ரிக் காரில் வெறும் 7.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

அதிகப்பட்சமாக மணிக்கு 150கிமீ வேகத்தில் இந்த காரில் செல்லலாம். புதிய மினி கூப்பர் எஸ்.இ எலக்ட்ரிக் காரினை வெள்ளை சில்வர், மிட்நைட் ப்ளாக், நிலவின் க்ரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் பெற முடியும். இதன் பேட்டரியை சார்ஜ் நிரப்ப 11 கிலோவாட்ஸில் ஒன்று 50 கிலோவாட்ஸில் ஒன்று என இரு சார்ஜர் தேர்வுகளை மினி வழங்குகிறது.

முதல் மினி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கின!! ரூ.1 லட்சத்தில் புக் செய்யலாம்!

இவற்றின் மூலம் 0-வில் இருந்து 80% சார்ஜை முறையே 2.5 மணிநேரங்கள் மற்றும் 35 நிமிடங்களில் எட்டிவிடலாம். மற்றப்படி இந்த மினி எலக்ட்ரிக் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அளவில் சிறியதாக, வெறும் 3 கதவுகளுடன் இருப்பினும், மினி கூப்பர் எஸ்.இ காரின் விலையினை ரூ.50 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #மினி #mini
English summary
Pre-booking is open for the first all-electric MINI in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X