சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

2021 ஆட்டோ குவாங்சூ கண்காட்சியில் மிட்சுபிஷி ஏர்ட்ரெக் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடூ செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மிட்சுபிஷி எலக்ட்ரிக் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

சீனாவில் 2021ஆம் ஆண்டிற்கான ஆட்டோ சூவாங்சூ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த சீன மோட்டார் நிகழ்ச்சியில் தான் தற்போது பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி அதன் புதிய எலக்ட்ரிக் வாகனத்தை காட்சிப்படுத்தி உள்ளது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எஸ்யூவி காராக கொண்டுவரப்பட்டுள்ள மிட்சுபிஷி ஏர்ட்ரெக் புதிய இ-க்ரூஸிங் எஸ்யூவி கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டைனாமிக் ஷீல்டு தோற்றத்தில் இருந்து பின்பக்கத்தில் அறுகோண வடிவிலான டெயில்கேட் வரையில் மிட்சுபிஷியின் வழக்கமான டிசைன் மிளிர்கிறது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

தோற்றத்தை பொறுத்தவரையில், முரட்டுத்தனமான ஸ்டைலில், தடித்த கூர்மையான லைன்கள் உடன் அதிகளவில் க்ரோம் உள்ளீடுகளுடன் மிட்சுபிஷி ஏர்ட்ரெக் இவி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் மேட் கருப்பு நிற ஸ்லாட்களுடன் க்ரில், தனித்தனி ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் உடன் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவற்றை ஏர்ட்ரெக் கொண்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் ஏர்டேம், மிட்சுபிஷி கார்களுக்கே உண்டான அடையாளத்தில் நன்கு அகலமானதாக வழங்கப்பட்டுள்ளது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இவற்றுடன் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள் மற்றும் அவற்றிற்கு மேற்புறத்தில் சக்கர வளைவுகள் உள்ளிட்டவையும் காரின் தோற்றத்திற்கு ஏற்ப பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் T-வடிவில் வழங்கப்பட்டிருக்க, பம்பர் நமது கவனத்தை ஈர்க்கிறது. இந்த எஸ்யூவி காரில், ‘இவி' லோகோக்களை முன்பக்க கதவுகளிலும், பின்பக்க கதவிலும் பார்க்க முடிகிறது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய ஏர்ட்ரெக் இவி-யில் அதிக திறன் கொண்ட 70 கிலோவாட் ட்ரைவ் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்ச 520கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லக்கூடியது என தயாரிப்பு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டாருக்கு 135 கிலோவாட்ஸ் (181 பிஎச்பி) வரையிலான ஆற்றலை வழங்கக்கூடியதாம். இந்த ட்ரைவ் பேட்டரி ஏர்ட்ரெக் இவி-யின் மத்தியில் வழங்கப்பட்டுள்ளதையும் வெளிப்படையாக மிட்சுபிஷி இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இதன் விளைவாக, வாகனத்தில் குறைந்த ஈர்ப்பு மையத்துடன் முன்-பின்பக்க எடை மிக சரியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மோட்டார், இன்வெர்ட்டர் மற்றும் குறைப்பு ட்ரைவ் உள்ளிட்டவை அனைத்தும் சிறிய அளவில் ஒரே யூனிட்டாக, எடை குறைவானவைகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவை வாகனத்தின் ட்ரைவிங் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய வடிவமைப்பே ஏர்ட்ரெக் இவி-ஐ அதிக குதிரையாற்றல் மற்றும் டார்க் திறனை வழங்கக்கூடியதாக கொண்டுவர முடிந்துள்ளதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் உட்புற கேபினும் நன்கு விசாலமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டில் கிடைமட்ட வடிவில் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்பட்டுள்ளது. நன்கு அகலமாக இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் பகுதி கொடுக்கப்பட்டுள்ளதால், ஓட்டுனருக்கு சாலையில் இருந்து பெரியதாக பார்வையை எடுக்க தேவை இருக்காது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

அதுமட்டுமின்றி, இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் பகுதி ஓட்டுனர் எளிமையாக கட்டுப்படுத்தும் இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் கைகள் அடிக்கடி படும் இடங்களில் எல்லாம் மென்மையான பேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிச்சயம் பயணிகளின் பயண அனுபவத்தை சவுகரியமானதாக மாற்றும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கிட்டத்தட்ட 2830மிமீ நீளத்தில் நீண்ட வீல்பேஸை கொண்டுள்ளது.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

ஏர்ட்ரெக் இவி வெளியீட்டின் போது பேசிய மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப்பிரேஷனின் நிர்வாக இயக்குனர் டகோ கடோ, ஏர்ட்ரெக் என்கிற பெயரிலான பிராண்டின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் சாகச பயணங்களை தாராளமாக மேற்கொள்ளலாம். இவி போன்ற புதிய ஆற்றல் வாகனங்களின் மூலம் புதுமையான சுற்றுச்சூழலுக்கு முயற்சித்துவரும் சீனாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய ஏர்ட்ரெக் உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என கூறினார்.

சீனாவிற்காக மிட்சுபிஷியின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார், 2022 ஏர்ட்ரெக்!! அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை கான்செப்ட் வெர்சனில் இதே பெயரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஆட்டோ ஷாங்காய் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. ஏர்ட்ரெக் என்ற பெயர் மிட்சுபிஷி பிராண்டிற்கு ஒன்றும் புதியது அல்ல. ஜப்பானில் 2001இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிட்

Most Read Articles
English summary
Mitsubishi Airtrek Revealed.
Story first published: Sunday, November 21, 2021, 23:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X