Just In
- 5 min ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- 20 min ago ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- 59 min ago கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- 3 hrs ago சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
Don't Miss!
- Sports GT vs DC : டெல்லி வைத்த ஆப்பு.. ஐபிஎல் தொடரின் மோசமான ஸ்கோரை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!
மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த தனித்துவமான வாகனங்களுள் நிச்சயம் ஜிப்ஸியும் ஒன்றாகும். பல வெளிநாட்டு சந்தைகளில் இந்த மாருதி தயாரிப்பு பல்வேறான பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பிஎஸ்6 மாற்றத்தாலும், இந்தியாவில் விற்பனை குறைந்ததினாலும் மாருதி ஜிப்ஸியின் விற்பனை நிறுத்தப்பட்டாலும், வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானில் சுஸுகி ஜிம்னி என்கிற பெயரில் விற்பனையாகும் இந்த சிறிய ரக 4x4 எஸ்யூவி வாகனத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால் இந்தியாவிலும் ஜிம்னி மாடலை கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், அவ்வப்போது மாடிஃபை செய்யப்பட்ட ஜிப்ஸி வாகனங்களை பற்றி நமது செய்தியில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் ராலி குழு ஒன்றால் மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஜிப்ஸி வாகனத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
Image Courtesy: Small Town Rider
ஸ்மால் டவுன் ரைடர் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவின் மூலம் இந்த குறிப்பிட்ட ஜிப்ஸியின் உரிமையாளர் ஆஃப்-ரோடு பிரியர் என்பதும், அவர் ராலி போட்டிகளில் கலந்துகொண்டு வருவதும் நமக்கு தெரிய வருகிறது.
இந்த மாடிஃபை வாகனத்தை பார்த்ததும் நம்மை வசீகரிப்பது அதன் மண் பழுப்பு நிற பெயிண்ட்டும், அதற்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற ஹைலைட்களுமே ஆகும். முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்களை எல்இடி வளைவுகளுடன் கொண்டுள்ள இந்த மாடிஃபை ஜிப்ஸி வாகனத்தின் க்ரில் பகுதியில் எந்த மாற்றமுமில்லை, மாருதி வழங்கிய க்ரில் அப்படியே உள்ளது.
ஆனால் முன் பம்பர், டர்ன் இண்டிகேட்டர்களை கொண்ட ஆஃப்-ரோடு பம்பர் ஒன்றினால் மாற்றப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆஃப்-ரோடு பயணங்களின் போது சேற்றில் சிக்கி கொண்டால் வாகனத்தை இழுப்பதற்கு எலக்ட்ரானிக் வின்ச் ஒன்றும் பம்பர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பக்கவாட்டிலும் விளக்குகளை இந்த வீடியோவில் பார்க்கலாம். பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மஹிந்திரா பொலிரோவில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். வெளிப்புறத்தை காட்டிலும் வாகனத்தின் முக்கிய அம்சங்கள் உட்பக்க கேபினில் தான் வழங்கப்பட்டுள்ளன.
கேபின், வாகனத்தின் இறுதிமுனை வரையில் பெரியதாக உள்ளது. இதனை ராலி கேபின் என்பார்கள். இதனால் பின்பகுதியில் காலியிடம் உள்ளது. ராலி போட்டிகளுக்கென இதன் கேபின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப அம்சங்கள் எதனையும் இதன் கேபினில் பார்க்க முடியவில்லை.
வெளிப்புறத்திற்கு ஏற்ப டேஸ்போர்டு பழுப்பு நிறத்திலும், இருக்கைகளும் அதே நிறத்தில் கூடுதல் குஷின் உடனும் காட்சியளிக்கின்றன. வாகனத்தின் மேற்கூரை முற்றிலுமாக கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வெளிப்புற தோற்றத்திற்கு இணையாக இதன் உட்புற கேபின் உள்ளது.
இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையில் செலவானதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி ஜிப்ஸிக்கு இப்போதும் இந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவ்வளவு செலவு செய்து ஜிப்ஸி ஒன்று மாடிஃபை செய்யப்பட்டதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!