மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

மாருதி சுஸுகி, மலிவான விலைகள் மற்றும் குறைவான பராமரிப்பு செலவை கொண்ட பல்வேறு வகையான கார் மாடல்களுடன் இந்தியர்கள் பலரால் விரும்பி தேர்ந்தெடுக்கக்கூடிய பிராண்ட்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

இதன் காரணமாக மாருதி சுஸுகிக்கு இந்தியா முழுவதும் டீலர்ஷிப்களும், சேவை மையங்களும் உள்ளன. அதேநேரம் மாடிஃபை பணிகளுக்கும் அதிகளவில் மாருதி சுஸுகி கார்கள் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

இதற்கு முன்னர் மாருதி ஸ்விஃப்ட், பலேனோ உள்ளிட்ட கார்கள் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். இந்த வகையில் தற்போது மாடிஃபை செய்யப்பட்ட சியாஸ் காரை பற்றி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாடிஃபை பணிகளை ஏற்றுள்ள இந்த சியாஸ் கார் தொடர்பான வீடியோ மேட் மைண்டர்ஸ் வி லாக் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த மாருதி செடான் காரில் மேற்கொள்ளப்பட்ட மாடிஃபிகேஷன் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் இதன் உரிமையாளர் விரிவாக தெரிவிக்கிறார்.

முன்பக்கத்தில் கருப்பு மெஷ் டிசைனில் ஸ்டாக் க்ரில்லிற்கு மாற்றாக வேறொரு யூனிட் வழங்கப்பட்டதுள்ளதாக கூறும் இவர், இந்த மாருதி சியாஸ் காரை ஒன்றரை வருடத்திற்கு முன்பு தான் வாங்கியுள்ளார். முன்பக்கத்தின் அடிப்பகுதியில் இந்த கார் சிவப்பு நிற ஹைலைட் உடன் புதியதாக ஸ்பிளிட்டரை பெற்றுள்ளது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

இதற்கு மேட்ச் ஆகும் விதத்தில் சிவப்பு நிற ஹைலைட் உடன் வேறொரு புதிய அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் கூடுதல் பேனலுக்கும் கீழே பிளாஸ்டிக் பேனல் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, அதிலும் சிவப்பு நிறத்தை பார்க்க முடிகிறது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

அதிகளவில் ஒளியை வெளியேற்றக்கூடிய ஹெட்லைட்களை பெற்றுள்ள இந்த காரின் ஃபாக் விளக்குகள் உடன் சில எல்இடி விளக்குகளும் உள்ளன. பம்பர் லாக்கும் இந்த செடானில் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

காரின் க்ரே நிறத்தில் கை வைக்கப்படவில்லை. ஆனால் கூடுதலாக பளிச்சிடும் க்ரே நிறத்தில் ஸ்ட்ரிப் கதவுகளில் வழங்கப்பட்டுள்ளது. சியாஸில் மாருதி நிறுவனம் வழங்கும் க்ரோம் பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

அவற்றிற்கு ஏற்ப முன்பக்க ஃபெண்டரில் கருப்பு நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பேனலை இந்த மாடிஃபை கார் பெற்றுள்ளது. ஓட்டுனரால் பார்க்க முடியாத காரின் பக்கவாட்டு கீழ்பகுதியை காட்ட கூடுதலாக கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

பின்பக்கத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. சிறிய சிறிய மாற்றங்களை மட்டுமே காரின் உரிமையாளர் கொண்டுவந்துள்ளார். இந்த வகையில் டெயில்லைட்களின் உட்புறம் நேர்த்தியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

அதேபோல் கார்போ ஃபைபரால் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்பாய்லரையும், ஒளி எதிரொலிக்கும் விளக்குகளுடன் பம்பரை பின்பக்கத்தில் இந்த கார் பெற்றுள்ளது. முன்பக்கத்தை போன்று பின்பக்க பம்பரின் அடிப்பகுதியிலும் சிவப்பு நிறத்தை பார்க்கலாம்.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

இவற்றுடன் பின்பக்கத்தில் இரு குழாய்களுடன் எக்ஸாஸ்ட் அமைப்பு உள்ளது. உட்புறத்தில் இந்த மாடிஃபை சியாஸ் கார் பக்கெட் இருக்கைகள், தொடுத்திரை இண்டோடெயின்மெண்ட் சிஸ்டம், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரத்துடன் சுற்றிலும் விளக்குகளை கொண்டுள்ளது.

மாருதி காரா இது, நம்பவே முடியல!! கேரளாவில் தான் இந்த மாதிரியான கார்களை காண முடியும்!

அதேநேரம் கருப்பு நிற மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ள சிறிய எல்இடி விளக்குகளும் நம்மை ஆச்சிரியப்படுத்துகின்றன. இந்த காரின் உரிமையாளர் ஸ்பீக்கர் சிஸ்டத்தையும் அப்கிரேட் செய்துள்ளார். இவற்றை தவிர்த்து இந்த சியாஸ் காரில் வேறெந்த மாற்றமும் வழங்கப்படவில்லை.

Most Read Articles
English summary
Modified Maruti Suzuki Ciaz sedan looks gorgeous. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X