ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இரு தரமான வாகனங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று கொண்டாட இருக்கின்றது. நாட்டின் மிகவும் முக்கியமான இந்த நாளில் இரு பிரபல நிறுவனங்கள் தங்களின் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 பிரீமியம் தர 7 சீட்டர் காரையும், பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையுமே இந்தியாவில் வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஓலா நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கி விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இதுவே ஆகும்.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

இந்த மின்சார இருசக்கர வாகனம் பற்றியும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்குறித்த முக்கிய விபரங்களை பற்றியே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இந்த இரண்டு வாகனங்களும் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் வாகனங்களாகும்.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700:

மஹிந்திரா எக்ஸ்யூவி 700, இது ஓர் பிரீமியம் தர 7 இருக்கைகள் கொண்ட காராக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த கார் டாடாவின் சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் சமீபத்திய அறிமுகங்களில் ஒன்றான ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

இந்த காரில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப், ஏர் ப்யூரிஃபையர், அலெக்சா ஆட்டா வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், ஸ்கைரூஃப் மற்றும் டிராவ்னஸ் டிடெக்சன் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற இருக்கின்றன.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

இந்த எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அதி திறன் வாய்ந்தவை ஆகும். ஆம், மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி700 காரில் அதிக பவர்ஃபுல்லான 2.0 லிட்டர் டர்போ எம்ஸ்டாலியன் மோட்டாரை பயன்படுத்த இருக்கின்றது.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

இந்த எஞ்ஜின் 200 பிஎச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோன்று, 185 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் எஞ்ஜினிலும் இந்த கார் கிடைக்கும். இந்த காரின் விலை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதநிலையில் ரூ. 15 லட்சம் அல்லது ரூ. 18 வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாக இருக்கும் மற்றுமொரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வாகனமாக ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. ஓலா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மூன்று விதமான தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

எஸ், எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய தேர்வுகளில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 10 விதமான நிற தேர்விலும் இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு எக்கசக்கமான தேர்வுகளை வாரி வழங்கும் நோக்கில் இந்த தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

மேலும், அதிகபட்சமாக 150 கிமீ ரேஞ்ஜ் மற்றும் மணிக்கு 100 கிமீ வேகம் எனும் சூப்பர் திறன்களையும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓலா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதமாக ஓலா ஹைபர் சார்ஜர் நெட்வொர்க் மற்றும் வீட்டிலேயே சார்ஜிங் செய்யும் வசதி உள்ளிட்டவற்றை வழங்க இருக்கின்றது.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை விபரம் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாகும் இரு தரமான வாகனங்கள்... இந்தியர்கள் இந்த வாகனத்துக்கு ரொம்ப ஆவலா காத்திருக்காங்க!

வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்றே விலை போன்ற முக்கிய விபரங்கள் வெளியாக இருக்கின்றன. இத்துடன், இரு வாகனங்களிலும் இன்னும் என்னென்ன சிறப்பு அம்சங்கள் எல்லாம் இடம் பெற இருக்கின்றன? என்ன மாதிரியான தேர்வுகளில் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன என்பது பற்றிய அனைத்து தகவல்களும் ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Most expected 2 vehicle launches on coming 15th august
Story first published: Tuesday, August 3, 2021, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X