காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ என எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஓர் கார் தயாரிப்பு நிறுவனம் இரு உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகளை டூப்ளிகேட் செய்து உருவாக்கியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை அப்படியே காப்பி செய்து தயாரிப்பதில் பெயர்போனவர்கள் சீனர்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இரு உலக புகழ்பெற்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை தழுவி ஒற்றைக் காரை வடிவமைத்திருக்கின்றது சீன கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

உலகின் மாபெரும் வாகன சந்தையாக சீனா இருக்கின்றது. இந்த சந்தையிலேயே உலகின் அதிகம் காப்பி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது, பிரபல நிறுவனங்களின் டூப்ளிகேட் மாடல் வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சீனா கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று, பிரபல சொகுசு கார்களான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களை ஒத்த சொகுசு கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த காரை தற்போது நடைபெற்று வரும் 2021 ஷாங்காய் வாகன கண்காட்சியிலும் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

இந்த புதிய டூப்ளிகேட் செய்யப்பட்ட சொகுசு காருக்கு சீன நிறுவனமான ஹாங்க்யி (Hongqi) எச்9 எனும் பெயரை வைத்துள்ளது. இது சிறப்பு பதிப்பு வாகனம் ஆகும். இக்காரையே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய சொகுசு கார்களின் டிசைன் தாத்பரியங்களுடன் ஒத்து போகும் வகையில் சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

வெளிப்புறத் தோற்றம் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ரோல்ஸ் ரோய்ஸ் கோஸ்ட் காரில் இருப்பதைப் போன்றே உள்ளன. எல்இடி ஹெட்லமேப் தொடங்கி முகப்பு பகுதி க்ரில் வரை அப்படியே டூப்ளிகேட் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக மிக லேசான மாற்றங்களுடன் அவை காட்சியளிக்கின்றன.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

அதேசமயம், ஹாங்க்யி எச்9 காரின் பக்கவாட்டு பகுதி பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரை போன்று காட்சியளிக்கின்றது. ஆனால், இதன் அலாய் வீல் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை போன்று உள்ளது. இதுதவிர, பிரபல கடில்லாக் சிடி5 காரின் தோற்றம் மற்றும் ஸ்டைலையும் இக்கார் லேசாக பெற்றிருக்கின்றது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

3.0டி வெர்ஷனிலான வி6 பெட்ரோல் எஞ்ஜினையே சீன நிறுவனம் இந்த காரில் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 283பிஎச்பி மற்றும் 400என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. தொடர்ந்து, 252 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய டர்போசார்ஜட், 4 சிலிண்டர் எஞ்ஜின் தேர்விலும் இக்காரை சீன நிறுவனம் வழங்க இருக்கின்றது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

இவ்விரு எஞ்ஜின்களிலும் 7ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றன. இது காரின் பின் வீலுக்கு மட்டுமே இயங்கு விசையை வழங்குகின்றது. உருவம், சிறப்பம்சம் என அனைத்திலும் இக்கார் விஷயத்தில் காப்பியடித்த சீன நிறுவனம், பெயிண்டிங் விஷயத்திலும் காப்பி-பேஸ்ட் செயலையே செய்துள்ளது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் கார்களில் தென்படுவதைப் போன்று இரு நிற பெயிண்டிங் வசதியை நிறுவனம் வழங்குகின்றது. மேற்கூரை வேறு நிறத்திலும், உடல் பகுதி வேற நிறத்திலும் வழங்கப்படுகின்றன. இதுதவிர, காரின் உடல்பகுதியில் சில இடங்களில் தங்க நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

இது ஓர் மிக நீளமான கார் என்பதால் இக்காரில் இட வசதி என்பது மிக அதிகமாக உள்ளது. தொடர்ந்து, இக்காரின் பூட் ஸ்பேசும் மிக அதிகம். 370 லிட்டர் கொள்ளளவில் அது உள்ளது. வெவ்வேறு நிறுவனங்களின் கலவையாக உருவாகியிருக்கும் இக்காரில் சொகுசு வசதிகளுக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றது.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

மசாஜ் செய்யும் இருக்கை, சிறிய குளிர்சாதன பெட்டி, மும்முனை க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்மென்ட் வசதிக் கொண்ட இருக்ககை, தொலைக்காட்சி திரை என பல்வேறு சிறப்பம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ஸ்கூல் பசங்க எவ்ளவோ மேல்! காப்பியடித்து உருவாக்கப்பட்ட சொகுசு கார்.. ரோல்ஸ் ராய்ஸ்-பென்ட்லீ எதையும் விட்டு வைக்காத சீன நிறுவனம்!

தொடர்ந்து, காரின் லக்சூரி தோற்றத்தைக் கூட்டும் வகையில் இருக்கைகளுக்கு லெதர் போர்வை, குரோம் மற்றும் பியானோ கருப்பு நிற பூச்சுக் கொண்ட பிளாஸ்டிக் பேனல்கள், இரு திரைகள் கொண்ட டேஷ்போர்டு, தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Most Luxurious Chinese Copycat Hongqi H9 Showcased At The 2021 Shanghai Motor Show. Read In Tamil.
Story first published: Wednesday, April 21, 2021, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X