Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 3 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மும்பை போலீஸ் அதிரடி... 151 புதிய கார்கள் பறிமுதல்... திடுக்கிடும் தகவலால் உறைந்துபோன வாகன ஆர்வலர்கள்!!
மும்பை போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான பிஎஸ்-IV வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகர காவல்துறை ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குகின்ற வகையில் ஓர் தகவலை தற்போது வெளியிட்டிருக்கின்றது. புத்தம் புதிய 151 யூனிட் பிஎஸ்-IV வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாக அவர்கள் வெளியிட்டிருக்கும் தகவலே வாகன ஆர்வலர்களைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கார்களுமே பிஎஸ்-4 தரத்திலான வாகனங்கள் ஆகும். இதன் காரணத்தினாலேயே போலீஸார் அவற்றை கைப்பற்றியிருக்கின்றனர். காற்று மாசுபாடு காரணம் காட்டி புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு கடந்த வருடம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கட்டாய பிஎஸ்6 வாகன உற்பத்தி தள்ளப்பட்டனர். மேலும், தற்போது நாட்டில் பிஎஸ்4 வாகனங்களே விற்பனைக்கு இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது. இவ்வாறு நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் ஒட்டுமொத்தமாக 151 பிஎஸ்4 தர வாகனங்களை மும்பை நகர போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.

இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் புதிய வாகனங்களின் மதிப்பு சுமார் 7.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. வாகனங்களுடன் சேர்த்து அவற்றை விற்க முயன்ற 9 பேரையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

பிஎஸ்4 வாகனங்களின் விற்பனைக்கு மார்ச் மாதம் இறுதி நாளன்றே முழுக்குப் போடப்பட்டுவிட்டது. அதாவது, 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 தர வாகனங்களை மட்டுமே வாங்க, விற்க மற்றும் ஆர்டிஓ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அனைவரும் புதிய தரத்திற்கு தங்களின் வாகனங்களை உயர்த்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

இதன் விளைவாக அனைத்து நிறுவனங்களும் புதிய பிஎஸ்6 தரத்திலான வாகனங்களை மட்டுமே விற்க தொடங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே குறைந்த விலையில் பிஎஸ்4 வாகனங்களை மும்பையைச் சேர்ந்த 9பேர் கொண்ட கும்பல் விற்பனைச் செய்து வந்தது தெரியவந்தது.

இவர்கள், போலீயான ஆவணங்களைக் கொண்டு வாகனங்களை பதிவு செய்தது மட்டுமின்றி, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அவற்றை விற்பனைக்கும் வழங்கியிருக்கின்றனர். குறிப்பாக, டெல்லி, ஹர்யானா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, ஹிமாச்சல், அருணாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களைத் தேர்வு செய்து அவர்கள் விற்பனைச் செய்திருக்கின்றனர்.

விற்பனையில் இருக்கும் புதிய கார்களைக் காட்டிலும் மிக மிகக் குறைந்த விலையில் பிஎஸ்4 வாகனங்களை அவர்கள் விற்பனைச் செய்திருக்கின்றனர். இவர்கள் மீது ஐபிசி பிரிவு 420 மற்றும் 465 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பிபின் குமார் சிங், கூறியிருக்கின்றார்.

மேலும், கார்கள் மட்டுமின்றி அவற்றை பதுக்கி வைக்க பயன்படுத்தி வந்த கராஜ் மற்றும் விற்பனை அலுவலகம் ஆகியவற்றிற்கும் போலீஸார் தற்போது சீல் வைத்திருக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்திலேயே இந்த மோசடி கும்பல் கோடவுண் மற்றும் அலுவலகங்களைச் செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

இதுதவிர, வாகனங்களின் சேஸிஸ் எண்ணை மாற்றியமைப்பதற்கான கருவியை ஹைதராபாத்தில் வைத்து அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றையும் தற்போது போலீஸார் பறிமுதல் செய்து தங்கள் வசப்படுத்தியிருக்கின்றனர்.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
Source: TOI