"சாதாரண மக்களுக்கும் உதவ வேண்டும்"... மக்களுக்காக ஹெக்டர் எஸ்யூவி காரை ஆம்புலன்ஸாக மாற்றிய எம்ஜி...

சாதாரண மக்களுக்கும் உதவும் விதமாக தனது ஹெக்டர் காரை ஆம்புலன்ஸாக மாற்றி எம்ஜி நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஹெக்டரும் ஒன்று. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி-யை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி அன்றே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் நிறுவனத்திற்கு நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வாகனமாகும்.

இந்த ஒற்றை மாடலின் வாயிலாகவே நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனங்களின் பட்டியலில் எம்ஜியும் ஒன்றாக மாறியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காரையே நிறுவனம் தற்போது ஆம்புலன்ஸாக மாற்றி நாக்பூர் மருத்துவமனைக்கு வழங்கியிருக்கின்றது. 'எம்ஜி சேவா' (MG SEWA) திட்டத்தின்கீழ் இந்த கார்களை நாக்பூர் எம்ஜி கார் விற்பனையாளர் வழங்கியிருக்கின்றார்.

ஒட்டுமொத்தமாக ஐந்து ஹெக்டர் கார்கள் இதற்காக ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. நாக்பூரில் உள்ள நாஞ்ஜியா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கே இந்த கார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஹெக்டர் கார்களை வழங்கும் நிகழ்வில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவரே கார்களை கொடியசைத்து பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார். மத்திய அமைச்சர் மற்றும் மாநிலத்தின் சில முக்கிய அரசு அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சாதாரண மக்களுக்கும் உதவும் நோக்கில் இந்த ஆம்புலன்ஸ் கார்களை வழங்கியிருப்பதாக எம்ஜி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இதுபோன்று ஆம்புலன்ஸாக மாற்றியமைக்கப்பட்ட ஹெக்டர் கார்களை மருத்துவமனைக்கு வழங்குவது முதல் முறையல்ல. முன்னதாக வதோதராவில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவமனைக்கும், குஜராத் ஹலோல் பகுதியில் இருக்கும் சிஎச்சி மருத்துவமனைக்கும் இதுபோன்ற ஆம்புலன்ஸ் ஹெக்டர் கார்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மருத்துவமனைகளிடத்தில் இருந்து ஹெக்டர் ஆம்புலன்ஸ் கார்குறித்து நல்ல சாதகமான கருத்து கிடைத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் நாக்பூர் மருத்துவமனைக்கும் வழங்கியிருக்கின்றது.

இக்காரில் ஆக்ஸிஜன் சிலிண்டர், மருந்துகள், வெண்டிலேட்டர், இன்வெர்டர், ஸ்ட்ரெட்சர் மற்றும் 5 கூடுதல் பாராமீட்டார் சாக்கெட்டுகள் என பல்வேறு அவசரகால கருவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர தீயணைப்பான், சைரன் மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகள் உள்ளிட்டவையும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆகையால், மிகப்பெரிய உருவம் கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை ஹெக்டர் நிரூபித்திருக்கின்றது. எம்ஜி ஹெக்டர் கார் இந்தியாவில் ரூ. 12.89 லட்சம் தொடங்கி 18.42 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எஸ்யூவி காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Nagpur MG Car Dealer Donate's 5 Hector Ambulances To Nangia Specialty Hospital. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X