லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் டிஸ்கவரி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் தொழில்நுட்ப அம்சங்கள், வேரியண்ட் விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஃபேஸ்லிஃப்ட் மாடலானது S, SE, HSE, R-Dynamic S, R-Dynamic SE மற்றும் R-Dynamic HSE ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. 12 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

வெளிப்புறத்தில் பெரிய டிசைன் மாற்றங்களை பார்த்தவுடன் தெரியவில்லை. ஆனால், சில முக்கிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2021 மாடலாக வர இருக்கும் புதிய டிஸ்கவரி எஸ்யூவியில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய வடிவில் ஒளிரும் எல்இடி பகல்நேர விளக்குகள்கொடுக்கப்பட்டுள்ளன.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

பக்கவாட்டில் முக்கிய மாற்றமாக புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 19 அங்குலம் முதல் 21 அங்குலம் வரையிலான அளவுகளில் அலாய் வீல்கள் தேர்வுக்கு கொடுக்கப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப் இடம்பெறுகிறது.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியின் பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் பளபளப்பான கருப்பு வண்ண அலங்கார பாகம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

உட்புறத்தில் முக்கிய அம்சமாக இதன் 11.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய பிவி புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கூறலாம். 700W திறன் கொண்ட 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 12.3 அங்குல வெர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

இந்த எஸ்யூவியில் 8 ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, நீர் நிலைகளை கடந்து செல்வதற்கான பிரத்யேக கட்டமைப்பு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும், ஒரு டீசல் எஞ்சின் தேர்வும் கொடுக்கப்பட உள்ளது. பி300 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பி360 பெட்ரோல்- மைல்டு ஹைப்ரிட் மாடலில் உள்ள 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 355 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது புதிய டிஸ்கவரி எஸ்யூவி!

டி300 டீசல் -ஹைப்ரிட் மாடலில் உள்ள 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
The 2021 Land Rover Discovery has been listed on the official website. The new, updated Land Rover Discovery will be available in India sooner than we expected, as JLR has listed the updated version of Discovery on its Indian website even before its launch. The website also lists out the details such as specifications and available features across all its variants.
Story first published: Friday, April 30, 2021, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X