இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

கடந்த 2020ஆம் ஆண்டின் மத்தியில் உலகளவில் ஆடி நிறுவனம் க்யூ5 மாடலின் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இருபுறங்களிலும் கவனிக்கத்தக்க வகையிலான மாற்றங்களை பெற்றுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

இந்தியாவில் இந்த ஆடி கார் இந்த வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் புனேவில் பொதுசாலையில் க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

மோட்டார்பீம்செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் கார் முன்பக்கத்தில் எண்கோண க்ரில் அமைப்பை அதிகளவிலான க்ரோம் துண்டுகளுடன் கொண்டுள்ளது. க்ரில் அமைப்பின் பாதி பகுதி வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

மூடுபனி விளக்குகள் புதிய வடிவிலான குழிகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஹெட்லைட்கள் நேர்த்தியான வடிவில் புதியதாகவும், முன் பம்பர் சிறிய லிப் ஸ்பாய்லரையும் கொண்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களை க்ரோம் ட்ரிம் துண்டு ஒன்றாக இணைக்கிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

அதுமட்டுமின்றி பம்பரின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. காரின் உட்புற கேபினை காட்டுவதுபோல் எந்த ஸ்பை படமும் நமக்கு கிடைக்கவில்லை. ஆடி க்யூ5 போன்ற சொகுசு கார்களில் எப்படியிருந்தாலும் ப்ரீமியம் தரத்திலான வசதிகளே வழங்கப்படும்.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், திருத்தியமைக்கப்பட்ட மைய கன்சோல், 10.1 இன்ச் தொடுத்திரை உள்ளிட்டவற்றை நிச்சயம் இதன் கேபினில் எதிர்பார்க்கலாம். இதில் தொடுத்திரை யூனிட் அமேசான், அலெக்ஸா போன்ற இணைப்பு வசதிகளை கொண்டதாக இருக்கலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

மேற்கூறியவற்றுடன் க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹெட்ஸ்-அப் திரை போன்ற இதர வசதிகளையும் ஆடி நிறுவனம் கூடுதல் தேர்வாக வழங்கவுள்ளது. இந்தியாவில் இந்த லக்சரி எஸ்யூவி கார் ஒரே ஒரு 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனையை துவங்கவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

அதிகப்பட்சமாக 245 எச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு எஸ்-ட்ரோனிக் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டாண்டர்டாக குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும், கூடுதல் திறனிற்காக மைல்ட்-ஹைப்ரீட் அமைப்பும் புதிய க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்

ரூ.55 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த சோதனை ஓட்டத்தில் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் உள்ளது. இதனால் இதன் அறிமுகத்தை மிக விரைவாகவே எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
2021 Audi Q5 Facelift Spotted On Test Runs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X