ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

ஆடி பிராண்டில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் புதிய க்யூ7 எஸ்யூவி மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இந்தியாவில் கடந்த நவம்பர் மாத இறுதியில் தான் புதிய ஆடி காராக க்யூ5 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ரூ.58.93 லட்சம் என்ற விலையில் மலிவான ஆடி கார்களுள் ஒன்றாக விற்பனைக்கு வந்துள்ள க்யூ5 -ஐ தொடர்ந்து க்யூ7 மாடலையும் சந்தையில் அறிமுகப்படுத்த ஆடி இந்தியா நிறுவனம் தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

புதிய ஆடி க்யூ7 காரின் அறிமுகம் 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம் என இந்த தகவல்கள் கூறுகின்றன. க்யூ5 உடன் நடப்பு 2021ஆம் காலாண்டர் ஆண்டை நிறைவு செய்யும் ஆடி, அடுத்த ஆண்டில் க்யூ7 மூலம் இந்தியாவில் ‘க்யூ' மாடல்களின் வரிசையை மேலும் வலுப்படுத்தவுள்ளது. இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையை ஆடி தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆடி கார்களில் கிட்டத்தட்ட 45% எஸ்யூவி மாடல்கள் ஆகும். ஆடி விற்பனை செய்யும் நடுத்தர-அளவு க்யூ வரிசை எஸ்யூவி கார், க்யூ7 ஆகும். அதாவது க்யூ8, க்யூ9 போன்ற இதனை காட்டிலும் அளவில் பெரிய எஸ்யூவி கார்களையும் சில வெளிநாட்டு சந்தைகளில் ஆடி விற்பனை செய்கிறது.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இவற்றை போல் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள க்யூ7 சொகுசு எஸ்யூவி காரில் நிலையான தேர்வாகவே ஏகப்பட்ட அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த அம்சங்களில் பின்பக்க காற்றுப்பைகள், ஹீட்டட் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், அப்டேட்டான டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இவற்றில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது பின் இருக்கை பயணிகளுக்கான காற்றுப்பைகளை தான். ஏனெனில் பின் இருக்கை பயணிகளுக்கு பக்கவாட்டு காற்றுப்பைகள் வழங்கப்படுகின்றன. இந்த சொகுசு எஸ்யூவி காரில் ஆடி வழங்கும் மற்ற அம்சங்களாக, கேபின் விளக்குகள், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய முன்பக்க இருக்கைகள், அனைத்து வானிலைக்குமான தரைப்பாய்கள் முதலியவற்றையும் சொல்லலாம்.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

நினைவக செயல்பாடு மற்றும் மடக்கும் வசதியுடன் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச சந்தைகளில் 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் க்யூ7 விற்பனை செய்யப்படுகிறது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் எதிர்பார்க்காதீர்கள். ஆடி க்யூ வரிசை எஸ்யூவி கார்களுக்கே உண்டான தோற்றத்தை க்யூ7-னும் தொடர்ந்துள்ளது.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இந்த 3-இருக்கை வரிசை லக்சரி எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் நேர்த்தியான வடிவில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய காற்று ஏற்பான்களும், பக்கவாட்டில் 20-இன்ச் அலாய் சக்கரங்கள், ஜன்னல் கண்ணாடிகளின் பார்டர்களில் க்ரோம் கார்னிஷ், கதவுகளில் க்ரோம் லைன் மற்றும் அளவில் பெரிய, வட்டமான சக்கர வளைவுகளும் உள்ளன.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

பின்பக்கத்தில் மேட்ரிக்ஸ் எல்இடி டெயிலைட்கள் நேர்த்தியான க்ரோம் ஸ்ட்ரிப்-ஆல் இணைக்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பர் பகுதியில் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட முனையை கொண்ட எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் மோதல் பாதுகாப்பு தட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2022 ஆடி க்யூ7 எஸ்யூவி மாடலின் நீளம் 5,063மிமீ, அகலம் 1,970மிமீ மற்றும் உயரம் 1,741மிமீ ஆகும்.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இந்த எஸ்யூவி காரின் வீல்பேஸ் ஆனது 2,995மிமீ நீளத்தில் வழங்கப்படுகிறது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 865 லிட்டர்கள் கொள்ளளவில் கொடுக்கப்படுகிறது. இதனை பின் இருக்கை வரிசையினை மடக்குவதன் மூலம் 2,050 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். உலகளாவிய சந்தைகளில் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் ஆடி க்யூ7 விற்பனை செய்யப்படுகிறது.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இந்த புதிய ஆடி க்யூ வரிசை எஸ்யூவி மாடல் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். டிரான்ஸ்மிஷன் பணியினை கவனிக்க இந்த எஸ்யூவி வாகனத்தில் 8-ஸ்பீடு டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஆடியின் புதிய சொகுசு எஸ்யூவி காராக... 2022 க்யூ7!! அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகமா?

இவற்றுடன் குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் தொழிற்நுட்பத்தையும் க்யூ7-இல் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது. இந்திய சந்தையில் 2022 ஆடி க்யூ7 காருக்கு போட்டியளிக்க பிஎம்டபிள்யூ எக்ஸ்7, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கிளாஸ் மற்றும் வால்வோ எக்ஸ்சி90 உள்ளிட்டவை தயாராக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q7 launching early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X