Just In
- 6 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 9 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 9 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 11 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சொகுசு காரின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ இடையில் கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. இரு நிறுவனங்களும் பல்வேறு ரகத்தில் பல புதிய கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 6 சீரிஸ் ஜிடி சொகுசு கார் மாடலை இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் அடிப்படையிலான கூபே ரக மாடலாக வந்துள்ளது. இந்த கார் டிசைனில் கூபே ரக கார் போன்ற கூரை அமைப்புடன், 5 சீரிஸ் காரைவிட சற்று கூடுதல் இடவசதி மற்றும் கூடுதல் செயல்திறனை வழங்கும் எஞ்சினுடன் வந்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கவர்ச்சிகரமான இரட்டை சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண டிஃபியூசருடன் கூடிய பம்பர், இரட்டை குழல்கள் கொண்ட சைலென்சர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் இன்டீரியர் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவர்கிறது. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றஉள்ளது.

ஏற்கனவே ஆப்பிள் கார் ப்ளே மட்டுமின்றி, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் பின்புற பயணிகளுக்காக இரண்டு 10.25 அங்குல திரைகள் பொழுதுபோக்கு வசதியை அளிக்கும். 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் பார்க்கிங், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் லேசர் எல்இடி ஹெட்லைட், ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் (630ஐ) அதிகபட்சமாக 258 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இதன் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் (620டீ) அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், அதிசக்திவாய்ந்த 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் (630டீ) அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து எஞ்சின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி சொகுசு கார் ரூ. 67.90 லட்சம் முதல் ரூ.77.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் லக்சுரி லைன், எம் ஸ்போர்ட் ஆகிய வேரியண்ட்டுகளிலும், 2.0 லிட்டர் டீசல் மாடல் லக்சுரி லைன் வேரியண்ட்டிலும், 3.0 லிட்டர் டீசல் மாடல் எம் ஸ்போர்ட் என்ற வேரியண்ட்டிலும் கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் LWB மாடலுக்கு போட்டியாக இருக்கும்.