புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், புதிய தகவலை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் குறைவான பட்ஜெட்டில் மிக முக்கிய தேர்வுகளாக மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிகள் இருந்து வருகின்றன.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. சென்ற ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த எஸ்யூவியின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

இந்த சூழலில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் நேர் போட்டியாளராக உள்ள மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், தார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், புக்கிங் எண்ணிக்கையும் எகிடுதகிடாக அதிகரித்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

இதனால், தார் எஸ்யூவிக்கு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மஹிந்திரா தார் எஸ்யூவிக்காக காத்திருக்க தயாராக உள்ள நிலையில், சில வாடிக்கையாளர்கள் சரியான மாற்றுத் தேர்வு இலலாதததால், வேறு வழி இல்லாமல் காத்துக் கிடக்கின்றனர்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

மேலும், புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் வரவையும் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், சமூக வலைதளங்களில் புதிய குர்கா எஸ்யூவி வருகை குறித்து பலர் ஃபோர்ஸ் நிறுவனத்திடம் வினவி வருகின்றனர்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், புதிய தகவலை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளது ஃபோர்ஸ் நிறுவனம். அதில், விரைவில் புதிய குர்கா அறிமுகம் செய்யப்பட உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளது. இதனால், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் புதிய தலைமுறை குர்கா குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விரைவில் வருகிறது... மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டி!

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன், அதிக சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. முழுமையான ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு தக்கவகையிலும் விசேஷ மாடலும் குர்கா எஸ்யூவியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்காவின் சிறப்பம்சங்களை வீடியோவில் காணலாம்.

Most Read Articles

English summary
New Gen Force Gurkha BS6 model teased ahead of launch in India. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X