ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோவின் புதிய ஸ்பை படங்கள் அதன் சோதனை ஓட்டத்தில் இருந்து கிடைத்துள்ளன. அவற்றை பற்றிய விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

இதற்கிடையில் தான் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் தொடர்ச்சியாக சாலை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

புதிய தலைமுறை அப்கிரேடாக இந்த மஹிந்திரா எஸ்யூவி வாகனம் புதிய என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை பெற்று வரவுள்ளது. இதைதான் தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்களும் வெளிக்காட்டுகின்றன.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

இந்த படங்களின் மூலம் சோதனை ஸ்கார்பியோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் இது ஸ்கார்பியோவின் விலைமிக்க வேரியண்ட்டாக இருக்கலாம்.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

இவற்றுடன் இணைப்பு கார் தொழிற்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆறு காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் கேமிரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (இஎஸ்சி) உள்ளிட்டவையும் புதிய ஸ்கார்பியோவில் வழங்கப்பட உள்ளன.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

மேலும் புதிய அலாய் சக்கரங்கள், நிமிர்ந்த வடிவில் பின்பக்க கதவு, பெரிய அளவிலான பம்பர்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க க்ரில் உள்ளிட்டவற்றுடன் இந்த எஸ்யூவி காரின் வெளிப்புறம் ஸ்டைலான தோற்றத்திற்கு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதையும் இந்த ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கே உண்டான பெட்டகம் வடிவம் அதன் புதிய தலைமுறைக்கும் தொடரப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தாரில் வழங்கப்பட்ட 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தேர்விலும் புதிய ஸ்கார்பியோ விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

இதில் தாரின் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. 2021 ஸ்கார்பியோவின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

ட்ரான்ஸ்மிஷனுக்கு இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. தற்போதைய ஸ்கார்பியோவை போன்று புதிய தலைமுறை ஸ்கார்பியோவிலும் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம்.

ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எக்ஸ்யூவி700 மாடலிற்கு அடுத்து புதிய ஸ்கார்பியோ விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். மேற்கூறப்பட்ட அப்கிரேட்கள் எல்லாம் சேர்த்து பார்த்தோமேயானால், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸுக்கு 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ முக்கிய போட்டி மாடலாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New-Generation Mahindra Scorpio Spied With An Automatic Gearbox And Sunroof.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X