இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு தொடர்ந்து முன்பதிவுகள் குவிந்து கொண்டே உள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்து சுமார் 8 மாதங்கள் ஆகி விட்ட நிலையிலும், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு தற்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 5 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்து கொண்டுள்ளன. தார் எஸ்யூவிக்கு 50 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

தற்போது இந்த எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது. தார் எஸ்யூவிக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை பூர்த்தி செய்ய முடியாமல் மஹிந்திரா நிறுவனம் சற்று தடுமாறி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் 10 மாதங்கள் வரை நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காகவும் தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னமும் காத்திருப்பு காலம் குறைந்தது போல் தெரியவில்லை. நீங்கள் தற்போது இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்தால், டெலிவரி பெறுவதற்கு சுமார் 10 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின்கள் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் எல்இடி பகல் நேர விளக்குகள், அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பிலும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் தலைசிறந்து விளங்குகிறது.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

ஆம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று புதிய தலைமுறை மஹிந்திரா தார் அசத்தியுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டியாக, புதிய 2021 ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்ப புக்கிங் செய்தால் 10 மாசத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்! மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு இவ்ளோ முன்பதிவா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருவதற்கு, உலக அளவில் செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நவீன கார்களின் மூளை எனப்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
New-Gen Mahindra Thar Gets Over 55,000 Bookings. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X