என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

முன்பதிவு செய்தால் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்திலோ தான் டெலிவிரி செய்யப்படும் அளவிற்கு 2020 மஹிந்திரா தார் வாகனத்தின் காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வேரியண்ட்களுக்கு எத்தனை எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை தார் வாகனத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாத துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்பின் இந்த வாகனத்தின் விலைகள் இரு முறை அதிகரிக்கப்பட்டன மற்றும் ஆரம்ப நிலை ஏஎக்ஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டது.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

அதுமட்டுமில்லாமல் விற்கப்பட்ட தார் வாகனங்கள் ஒருமுறை தொழிற்சாலைக்கு அழைக்கப்பட்டு சில பழுது பார்க்கும் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டன. இருப்பினும், அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களான நிலையிலும் இரண்டாம் தலைமுறை தாருக்கு கிடைத்தும் வரவேற்பு குறைந்த பாடில்லை.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

எவ்வளவு முன்பதிவுகள் குவிந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் மஹிந்திரா நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் குறை கடத்தி உலோகங்களுக்கு உலகளவில் நிலவிவரும் தேவை இந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கும் சற்று தலைவலியாக அமைந்துள்ளது.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

இதன் எதிரொலியாக 2020 தாரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை டெலிவிரி எடுக்க காத்திருக்க வேண்டிய காலத்தை 10 மாதங்கள் வரையில் மஹிந்திரா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக ஆட்டோமேட்டிக் தேர்வில் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் தாரின் ஹார்ட் மேற்கூரை வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

இந்த வேரியண்ட்டை டீசல் மேனுவல் தேர்வில் வாங்கும் வாடிக்கையாளர்களும் 9.5 மாதத்தில் இருந்து 10 மாதங்கள் வரை காத்திருந்துதான் டெலிவிரி எடுக்க முடியும். இதனால் இந்த வேரியண்ட்களை இப்போது முன்பதிவு செய்தாலும், அடுத்த 2022ஆம் ஆண்டில் தான் தயாரிப்பு நிறுவனம் வாகனத்தை டெலிவிரி செய்யும்.

Variant Waiting Period
Convertible Top Up to 6 months
Hard Top Diesel Manual 9.5 to 10 months
Hard Top Diesel AT 10 months
Hard Top Petrol MT 6 months
Hard Top Petrol AT 10 months

Source: Cardekho

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

அதேநேரம் ஹார்ட் டாப் வேரியண்ட்டை பெட்ரோல் மேனுவல் தேர்வில் மற்றும் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி கொள்ளக்கூடிய மேற்கூரை வேரியண்ட்டை இரண்டில் ஏதேனும் ஒரு என்ஜின் தேர்வில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களாக தற்போதைக்கு உள்ளது.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

தாரின் மாற்றி கொள்ளக்கூடிய மேற்கூரை வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த வருடத்திற்குள் புதிய தலைமுறை தார் வாகனத்தை டெலிவிரி எடுக்க நினைப்போர் இந்த இந்த வேரியண்ட்களில் ஏதேனும் ஒன்றை முன்பதிவு செய்யலாம்.

என்ன இப்படியாயிடுச்சு... மஹிந்திரா தாரை முன்பதிவு செய்தால் 2022ல் தான் டெலிவிரி எடுக்க முடியுமாம்!!

2020 தாரில் 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் உடன் வழங்கப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.12.10 லட்சத்தில் இருந்து ரூ.14.15 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
You Just Might Get A Mahindra Thar In 2022 If You Book One Today
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X