Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்காக தற்போது டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து சில திட்டங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்த கூட்டு முயற்சிகள் தவிர, தற்போது விற்பனையில் உள்ள தனது தயாரிப்புகளை புதுப்பிக்கும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதில், பிரீமியம் எண்ட்ரி-லெவல் செலிரியோ ஹேட்ச்பேக்கும் அடக்கம். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக அடுத்த தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது பல முறை கேமரா கண்களில் அடுத்த தலைமுறை செலிரியோ சிக்கியுள்ளது.

இந்த சூழலில் அடுத்த தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக்கின் உருமறைப்பு இல்லாத சமீபத்திய ஸ்பை புகைப்படங்களை காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் பக்கவாட்டில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, புதிய தலைமுறை மாடலில் செய்யப்பட்டுள்ள ஏராளமான மாற்றங்களை நமக்கு எடுத்து காட்டியுள்ளது.

இதில், புதிதாக ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்லேம்ப்களும் ஒன்று. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்கில் உள்ள டெயில்லேம்ப்களை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டதை போல் இது உள்ளது. அத்துடன் பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், டெயில்கேட் டிசைன் மாற்றப்பட்டுள்ளதையும் இந்த ஸ்பை படங்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன.

டெயில்கேட் தற்போது வளைந்த மற்றும் வட்டமான வடிவில் புதிய டிசைனை பெற்றுள்ளது. அதே சமயம் பூட் லிட்டின் மையப்பகுதியில் சுஸுகி பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. பூட் லிட்டை திறப்பதற்கான ஹேண்டிலுக்கு மேலாக சுஸுகி பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் மட்டுமல்லாது உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இன்னும் பல்வேறு மாற்றங்களையும் புதிய தலைமுறை செலிரியோ பெற்றுள்ளது.

ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் 2021 செலிரியோ கட்டமைக்கப்படவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏராளமான மாடல்களில் இந்த பிளாட்பார்ம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பிளாட்பார்ம் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்கும் உதவும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.

பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக்கின் வீல் பேஸ் இன்னும் நீளமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கேபினில் அதிக இடவசதி கிடைக்கலாம். குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு தாராளமான இட வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பழைய தலைமுறை மாடலில் உள்ள அதே இன்ஜின்தான் புதிய தலைமுறை மாடலிலும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த K10B பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 68 பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. புதிய தலைமுறை செலிரியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.