சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகப்பெரிய சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்கும் விதமாக புதிய தலைமுறை மாடலாக டஸ்ட்டரை உருவாக்க முனைந்துள்ளது ரெனோ கார் நிறுவனம். இந்த கார் உருவாக்கம் குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

இந்தியாவில் ரெனோ நிறுவனம் மிக வேகமாக விற்பனை வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்தியாவுக்கான சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்த க்விட், ட்ரைபர் கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில், அண்மையில் கைகர் என்ற காம்பேக்ட் எஸ்யூவியும் வந்துள்ளது. இந்த கார்கள் மிக சவாலான விலையிலும், அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கின்றன.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

இந்த நிலையில், ரெனோ நிறுவனத்தின் சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக இந்தியர்களிடம் பெயர் பெற்ற டஸ்ட்டர் எஸ்யூவி சந்தைப் போட்டியால் பின்தங்கி உள்ளது. இதனை தூக்கி நிறுத்துவதற்கான அதிரடி திட்டத்தை ரெனோ கார் நிறுவனம் எடுத்துள்ளது.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

எனவே, முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக டஸ்ட்டர் எஸ்யூவியை உருவாக்குவதற்கான திட்டத்தை ரெனோ கார் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-ஏ என்ற கட்டமைப்புக் கொள்கையில்தான் பல விலை குறைவான கார்களை அந்நிறுவனம் உருவாக்கியது.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

ஆனால், புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியை தனது புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்க ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கார்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

ரெனோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் டேஸியா கார் நிறுவனம் பிக்ஸ்டெர் என்ற கான்செப்ட் கார் மாடலை அண்மையில் வெளியிட்டது. இந்த கான்செப்ட் அடிப்படையில்தான் புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி உருவாக்கப்பட உள்ளது.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

அதாவது, பி மற்றும் சி செக்மென்ட் ரக கார்களை டேஸியா நிறுவனம் உருவாக்க இருக்கிறது. இந்த மாடல்கள் டேஸியா மற்றும் ரெனோ கார் நிறுவனங்களின் பிராண்டுகளின் விற்பனை செய்யப்படும்.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி குறித்த பல அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெனோ மற்றும் டேஸியா பிராண்டுகளில் 14 புதிய கார் மாடல்கள் வரும் 2025ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்!

இதில், பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களும் அடங்கும். இந்த புதிய மாடல்கள் மூலமாக 45 சதவீத விற்பனை பங்களிப்பை பெறுவதற்கும் ரெனோ குழுமம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
According to report, New Gen Renault Duster will be built on a all new global platform.
Story first published: Monday, February 22, 2021, 9:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X