2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

முற்றிலும் புதியதான 2021 ஸ்கோடா ஃபேபியா காரை பற்றிய விபரங்கள் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய தலைமுறை ஃபேபியா 4,107மிமீ நீளம், 1,780மிமீ அகலம் மற்றும் 2,564மிமீ நீள வீல்பேஸில் முந்தைய தலைமுறை ஃபேபியாவை காட்டிலும் பரிமாண அளவுகளில் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

ஆனால் 1,460மிமீ-இல் கொண்டுவரப்பட்டுள்ள இதன் உயரம் முந்தைய மாடலை காட்டிலும் குறைவாகும். 2021 ஃபேபியாவின் தோற்றம் முழுவதையும் வெளிக்காட்டாமல், மறைப்புகளுடனே இந்த காரின் படங்களை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

என்னதான் கார் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தாலும், பெரிய க்ரில் அமைப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் கூர்மையான தோற்றத்தில் ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றை புதிய ஃபேபியா கார் பெற்றுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

அதேபோல் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் நம்மை கவர்ந்து இழுக்க, பின்பக்க ஜன்னல் கண்ணாடி ஆனது கூபே வடிவிலான தோற்றத்தில் உள்ளது. மற்றப்படி காரின் உட்புறத்தை இந்த படங்களின் மூலம் தயாரிப்பு நிறுவனம் வெளிக்காட்டாவிடினும், இதன் கேபினில் வழங்கப்படவுள்ள சில வசதிகள் ஏற்கனவே உறுதியாகிவிட்டன.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

இந்த சில வசதிகளில் 6.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (9.2 இன்ச்சிற்கு மேம்படுத்தப்பட்டிருக்கலாம்), டிஜிட்டல் காக்பிட், அனைத்து பயணிகள் இருக்கைகளிலும் குழந்தை இருக்கைகளுக்கான ஐசோஃபிக்ஸ் ஏற்றங்கள் மற்றும் 9 காற்றுப்பைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 380 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் பின் இருக்கை வரிசையை மடக்கினால், இதனை 1,190 லிட்டர்களாக அதிகரிக்க முடியும். 2021 ஃபேபியாவில் மூன்று என்ஜின் தேர்வுகளை வழங்கவுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

இதில் 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 65பிஎஸ்/ 95என்எம் மற்றும் 80பிஎஸ்/ 95என்எம் என இரு வெவ்வேறு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

இதேபோல் மற்றொரு 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 என்ஜினும் 95பிஎஸ்/ 175என்எம் மற்றும் 110பிஎஸ்/ 200என்எம் என இரு விதமான ஆற்றல்களை அதிகப்படசமாக வெளிப்படுத்துவதாக புதிய ஃபேபியாவில் வழங்கப்படவுள்ளது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

இதில் குறைவான வெர்சனில் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும், மற்றொரு வெர்சனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்படவுள்ளன. மூன்றாவது தேர்வாக 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 பெட்ரோல் என்ஜின் இந்த புதிய காரில் கொடுக்கப்படவுள்ளது.

2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!

அதிகப்பட்சமாக 150பிஎஸ் மற்றும் 250என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இந்த என்ஜின் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது. மற்றப்படி எந்தவொரு டீசல் என்ஜினையும் புதிய ஃபேபியா பெற்றுவர போவதில்லை. ஃபேபியா கார் மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவருவதற்கான திட்டம் எதுவும் ஸ்கோடாவிடம் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
All-New 2021 Skoda Fabia Specs Revealed Ahead Of Debut This Year
Story first published: Friday, February 26, 2021, 9:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X