ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரினை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான கால அளவு சுமார் 4 வருடங்கள் வரையில் உயர்ந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் (300 சீரிஸ்) வாகனத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்தது. அப்போதில் இருந்தே புதிய லேண்ட் க்ரூஸரின் படங்கள் இணையத்தில் வைரலாகின.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

இதனால் இந்த டொயோட்டா தயாரிப்பிற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இந்தியாவில் விற்பனையில் இல்லாவிடினும், சில குறிப்பிட்ட வெளிநாட்டு சந்தைகளில் டொயோட்டா எல்சி300 மாடலுக்கான காத்திருப்பு காலம் சுமார் 4 வருடங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

அதாவது வாடிக்கையாளர் புதிய எல்சி300-ன் சில வேரியண்ட்களை முன்பதிவு செய்தால், கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகே டெலிவிரி எடுக்க முடியுமாம். இதுகுறித்து டொயோட்டாவின் தாயகமான ஜப்பானில் இருந்து நமக்கு கிடைத்து தகவலின்படி, புதிய லேண்ட் க்ரூஸர் 300 மாடலுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி வரையில் மட்டுமே 21,500 முன்பதிவுகள் கிடைத்துள்ளன.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

இந்த அளவிற்கு முன்பதிவுகள் கிடைப்பதை பார்த்த டொயோட்டா நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்சி300-க்கான ஆர்டர்கள் ஏற்பதை தற்காலிகமாக நிறுத்தி கொண்டது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில் புதிய லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, முன்பதிவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. மறுபடியும் திறக்கப்பட்டதும் வழக்கம்போல் எல்சி300 காருக்கான முன்பதிவுகள் குவிய துவங்கின.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

இதன் காரணமாக சில அசாதாரண எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் டொயோட்டாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் உண்மையான லேண்ட் க்ரூஸர் பிரியர்களுக்கு மட்டுமே ஆர்டர்கள் வழங்குவதை உறுதி செய்வதற்காக, புதிய லேண்ட் க்ரூஸரை ஒரு வருடத்திற்கு மறுவிற்பனை செய்யக்கூடாது என டொயோட்டா தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து உறுதியினை பெற்று வருகிறது.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

ஏற்கனவே கூறியதுபோல் எல்சி300 ஒரு சில சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த டொயோட்டா வாகனத்திற்கான தேவை உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளது. புதிய லேண்ட் க்ரூஸரை வருடத்திற்கு வெறும் 5,000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

ஆனால் முன்பதிவுகள் மறுப்பக்கம் அதிகரித்து வருவதால், புதிய எல்சி300-ஐ முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான காலத்தை 4 வருடங்கள் வரையில் டொயோட்டா கொண்டுவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைக்கடத்திகளுக்கு உலகளவில் பெரிய அளவில் தேவை உள்ளது. இதன் காரணமாக நமது இந்தியாவில் பஜாஜ் சேத்தக் போன்ற சில வாகனங்களின் தயாரிப்பில் தடை ஏற்பட்டதை பார்த்திருந்தோம்.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரின் இசட்.எக்ஸ் மற்றும் ஜிஆர் ஸ்போர்ட் ட்ரிம்களுக்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் இந்த ட்ரிம்களுக்கே காத்திருப்பு காலம் 4 வருடங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மற்ற ட்ரிம்களுக்கு சற்று குறைவாக 2-3 வருடங்களாகவே காத்திருப்பு காலம் உள்ளது.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

லேண்ட் க்ரூஸர் 300 மாடலில் 3.5 லிட்டர் இரட்டை-டர்போ வி6 பெட்ரோல் என்ஜினும், 3.3 லிட்டர் இரட்டை-டர்போ வி6 டீசல் என்ஜினும் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 415 பிஎஸ் & 650 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 309 பிஎஸ் & 700 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

இதில் டீசல் என்ஜின் உடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் என்ஜின் உடனே புதிய எல்சி300 காரை வாங்க அதிக வாடிக்கையாளர்கள் (60%) விரும்புகின்றனர். இந்த என்ஜின்களுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

ஜப்பானில் இன்று புக் செய்தால், 4 வருடங்கள் கழித்தே டெலிவிரி! டொயோட்டா லேண்ட் க்ரூஸருக்கு குவியும் முன்பதிவுகள்

இவற்றுடன் 3.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் தேர்வையும் லேண்ட் க்ரூஸரில் புதியதாக கொண்டுவர டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஹைப்ரீட் என்ஜின் தேர்வு இந்த புதிய எஸ்யூவி வாகனத்தில் இன்னும் சில வருடங்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
New-Gen Toyota Land Cruiser Waiting Period Reaches To 4 Years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X