லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மாறுபட்ட புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் பல முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்கோடா ஃபேபியா கார் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் நான்காம் தலைமுறை மாடலாக ஸ்கோடா ஃபேபியா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB AO கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட அளவில் பெரிய மாடலாகவும், அதிக வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஃபேபியா கார் 4,108 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. பழைய மாடலைவிட 111 மிமீ கூடுதல் நீளத்துடன் இந்த கார் வந்துள்ளது. அதேபோன்று, வீல் பேஸ் நீளம் 2,564 மிமீ ஆக உள்ளது. பழைய மாடலைவிட 94 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

இந்த காரில் 380 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கையை மடக்கினால் 1,190 லிட்டர்கள் கொண்டதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த கார் 0.28 டிராக் கோ எஃபிசியன்ட் திறனுடன் மிகவும் சிறந்த ஏரோடைமிக்ஸ் கொண்ட கார் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிஇன்றன. உட்புறத்தில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

மேலும், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஹீட்டடு ஸ்டீயரிங் வீல், ஹீட்டடு விண்ட்ஷீல்டு, எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பின்புற பயணிகளுக்கு தனி ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. இதில், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இதே எஞ்சின் டர்போசார்ஜர் கொண்ட 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

முதலாவதாக இதன் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரையும், 93 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதாரண பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 15.5 வினாடிகளில் 0- 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 93 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டர்போ பெட்ரோல் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 10.6 வினாடிகளில் எட்டிவிடும்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

மேலும், இதன் சக்தியை 108 பிஎச்பியாகவும், 200 என்எம் டார்க் திறனாகவும் உயர்த்தினால், 0 - 100 கிமீ வேகத்தை மேனுவல் மாடல் 9.7 வினாடிகளிலும், ஆட்டோமேட்டிக் மாடல் 9.5 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 205 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றுவிடும்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

சில நாடுகளில் புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

இந்த காரில் லெவல்-2 தானியங்கி டிரைவிங் தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டு இருப்பது மிக முக்கிய விஷயமாக இருக்கும். லேன் டிராக்கிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

லெவல்-2 தானியங்கி டிரைவிங் நுட்பத்துடன் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம்!

இந்தியாவில் இந்த புதிய ஸ்கோடா ஃபேபியா கார் அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அதேநேரத்தில், எதிர்காலத்தில் இந்த புதிய மாடலுக்கான வர்த்தகத்தை ஆராய்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஸ்கோடா நிச்சயம் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has unveiled new generation Fabia car spawned by the MQB A0 platform.
Story first published: Wednesday, May 5, 2021, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X