மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

விற்பனையில் இல்லாத ஜெனிஸிஸ் ஜி80 செடான் கார் ஒன்று இந்தியாவில் மும்பை சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

2015ல் இருந்து ஹூண்டாய் மோட்டார்ஸின் லக்சரி கார் பிராண்டாக ஜெனிஸிஸ் இருந்து வருகிறது. இந்த பிராண்டில் இருந்து முதல் காராக ஜி90 2015ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து 2016ல் ஜி80 செடான் கார் அறிமுகமானது.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

அதன்பின் இந்த லக்சரி கார் பிராண்டில் இருந்து வெவ்வேறான தோற்றம் கொண்ட கார்கள் ஒவ்வொன்றாக அறிமுகமாகின. அதன் தொடர்ச்சியாக ஜெனிஸிஸ் பிராண்டின் முதல் எஸ்யூவி காரை தொடர்ந்து புதிய தலைமுறை ஜி80 செடான் கார் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

இந்த நிலையில் தான் தற்போது ஜி80 செடான் மும்பையில் உலா வந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை ஆட்டோ கார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் ஜெனிஸிஸ் ஜி80 செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காகவா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

விற்பனையில் மெர்சிடிஸ் இ-க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களை எதிர்த்துவரும் ஜி80, பிராண்டின் வரிசையில் ஜி70 மற்றும் ஜி90 செடான் கார்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படுகிறது. முன்னோடி மாடல்களை போன்று புதிய ஜி80 காரும் 4 கதவுகளை கொண்ட கூபே தோற்றத்தை ஏற்றுள்ளது.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

இதன் முன்பக்கத்தில் ஜெனிஸிஸ் பிராண்டிற்கே உண்டான ‘முகடு' க்ரில் அமைப்பை தொடரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்பக்க ஹெட்லைட்கள் டர்ன் இண்டிகேட்டர்களுடன் நேர்த்தியான வடிவத்தில், பிளவுப்பட்ட டிசைனில் வழங்கப்படுகின்றன. இதில் பின்பக்க ஹெட்லைட்டை இந்த ஸ்பை படங்களில் பார்க்கலாம்.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

உட்புற கேபின், பிராண்டின் முதல் எஸ்யூவி கார் மாடலில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்ட 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 2-ஸ்ட்ரோக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவற்றை இந்த புதிய தலைமுறை செடான் காரும் பெற்றுள்ளது.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

லக்சரி கார் என்பதால் லெதர் மற்றும் மர வேலைப்பாடுகளுடன் புதிய ஜி80 காரின் கேபின் பிரகாசமான நிறத்தில் சர்வதேச சந்தைகளில் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஜெனிஸிஸ் பிராண்டை அதன் முதல் எஸ்யூவி கார் மூலம் கொண்டுவர ஹூண்டாய் நிறுவனம் முயற்சித்து வருவதாக 2019ல் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார்!! இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா?

இருப்பினும் முதல் எஸ்யூவி கார் மட்டுமே உலகளவில் அறிமுகமானதை தவிர்த்து, இந்த லக்சரி கார் பிராண்ட் இதுவரை இந்தியாவிற்கு வருகை தராமல்தான் உள்ளது. தற்சமயம் ஜெனிஸிஸ் பிராண்டில் இருந்து ஜிவி80 மற்றும் ஹூண்டாய் டக்ஸனை அடிப்படையாக கொண்ட ஜிவி70 என்ற இரு எஸ்யூவிகள் சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஸ்பை படங்கள்
English summary
Genesis G80 sedan spied in India
Story first published: Tuesday, February 16, 2021, 21:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X