புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

தொடர் ஊரடங்கு உத்தரவுகளுக்கு பிறகு தற்போது தான் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சற்று முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையில் ஜொலித்து வருகின்றன.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

இதனால் தான் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அதிலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மலிவான விலையில் ஹேட்ச்பேக் கார்களை கொண்டுவரவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.

இந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

1.மாருதி சுஸுகி செலிரியோ

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை செலிரியோ காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருவது உங்களில் பெரும்பாலானோர்க்கு இந்நேரம் தெரிந்திருக்கும். இருப்பினும், புதிய செலிரியோ தற்போது வரைவில் வெளியிடப்படவில்லை.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

ஆனால் சமீபத்தில் டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவப்பு நிற செலிரியோ காரின் படங்கள் வெளியாகி இருந்தன. இதனால் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை செலிரியோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.4.5 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

2. ஹூண்டாய் ஐ20 என் லைன்

தென்கொரிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் என் என்கிற எழுத்தில் முடிவடையும் அதன் செயல்திறன்மிக்க பிரிவு கார்களை இதுவரையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது இல்லை. ஆனால் விரைவில் ஐ20 என் லைன் காரின் மூலமாக இந்த பிரிவை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

தற்போதைய ஐ20 பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் ஐ20 என் லைன் காரில் 'என் லைன்' முத்திரை உடன், புதிய பம்பர்கள் மற்றும் 17-இன்ச் அலாய் சக்கரங்களை வழங்கப்பட உள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினே தொடரப்படும் என தெரிகிறது.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

3. டாடா அல்ட்ராஸ் இவி

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக கொண்டுவர திட்டமிட்டுள்ள எலக்ட்ரிக் வாகனங்களுள் அல்ட்ராஸ் இவி-யும் ஒன்றாகும். நெக்ஸான் இவி-யில் வழங்கப்படும் அதே பவர்ட்ரெயின் தான் அல்ட்ராஸ் இவி ஹேட்ச்பேக் காரிலும் கொடுக்கப்பட உள்ளது. ஆனால் பேட்டரி தொகுப்பு சற்று பெரியதாக வழங்கப்படும்.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

இதன் காரணமாக நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை காட்டிலும் அல்ட்ராஸ் இவி-யில் கூடுதல் ரேஞ்ச் கிடைக்கும். ஆனால் விலை நெக்ஸான் இவி-யை காட்டிலும் சற்று குறைவாகவே நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அல்ட்ராஸ் இவி-யில் வழங்கப்பட உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

4. டாடா டியாகோ சிஎன்ஜி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மலிவான ஹேட்ச்பேக் காரான டியாகோவில் மைலேஜ் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் சிஎன்ஜி தேர்வை கொண்டுவர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் டியாகோ சிஎன்ஜி கார் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

இதனால் இந்த டாடா சிஎன்ஜி கார் விரைவில் சந்தையில் அறிமுகமாகலாம். எரிபொருள் செலவை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்படுகின்ற டியாகோ சிஎன்ஜி காருக்கு, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி, ஹூண்டாய் சாண்ட்ரோ சிஎன்ஜி உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

5. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலிலும் சிஎன்ஜி வெர்சனை கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஸ்விஃப்ட்டின் ஆரம்ப நிலை எல்.எக்ஸ்.ஐ ட்ரிம்-இல் மட்டுமே தொழிற்சாலையில் பொருத்தப்படும் சிஎன்ஜி தொகுப்பை தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.

புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் இவைதான்!!

மைலேஜ் அதிகம் வழங்கக்கூடிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் விலை தற்போதைய ஸ்விஃப்ட்டின் விலைகளை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் அதிகப்பட்சமாக 71 பிஎஸ் மற்றும் 95 என்எம் டார்க் திறனில் வழங்கப்படும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
New hatchback models to launched in indian market soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X