2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இந்தியாவில் ஹோண்டா டீலர்ஷிப்கள் 2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிட்ட் காருக்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் ஏற்க துவங்கியுள்ளனர். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

அதேநேரம் ஆன்லைனில் புதிய அமேஸை ஹோண்டா ஃப்ரம் ஹோம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதற்கான தொகையாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதுடன், 2021 அமேஸ் தொடர்பான டீசர் வீடியோ ஒன்றினையும் ஹோண்டா தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தான் கீழே காண்கிறீர்கள்.

இந்த புதிய காம்பெக்ட் செடான் காரை வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. புதிய ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் சில தொழிற்நுட்ப வசதிகள் அப்கிரேடும், திருத்தப்பட்ட ஸ்டைலும், புதிய பெயிண்ட் தேர்வுகளையும் தயாரிப்பு நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இந்தியாவில் ஹோண்டா அமேஸ் 2018ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. இந்த காம்பெக்ட் செடான் காரின் விற்பனை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து குறைந்து வருவதால், பிரிவில் மற்ற செடான் மாடல்களுக்கு போட்டியாக விளங்க அமேஸில் குறிப்பிடத்தக்க அப்கிரேட்களை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இதன்படி 2021 ஹோண்டா அமேஸில் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், ரீஸ்டைலில் பம்பர்கள், புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பிரத்யேகமான நிறத்தேர்வுகளுடன் வழங்கப்பட உள்ளன. ப்ரீமியம் உணர்விற்காக காரை சுற்றிலும் ஆங்காங்கே க்ரோம் தொடுதல்களை எதிர்பார்க்கலாம்.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இவற்றுடன் கேபினில் மாற்றியமைக்கப்பட்ட உள்ளமைவு, புதிய டேஸ்போர்டு லேஅவுட், வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை கொண்ட தொடுத்திரை மற்றும் சன்ரூஃப் போன்றவை வழங்கப்படலாம். மேலும், புதிய சிட்டி செடான் காரில் வழங்கப்பட்டுள்ள அலெக்ஸா குரல் உதவி வசதியினை அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த என்ஜின் தேர்வுகளில் ஒன்றான 1.2 லிட்டர், ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மற்றொரு தேர்வான 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக பொருத்தப்பட உள்ளது. இதனுடனும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

இதில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் இந்த டீசல் 79 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனேயே அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். தற்சமயம் விற்பனையில் உள்ள ஹோண்டா அமேஸ் காம்பெக்ட் செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.3 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரையில் உள்ளன.

2021 ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு துவங்கியது!! முன் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்

புதியதாக அப்கிரேட்கள் கொண்டுவரப்படுவதால், ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை இதனை காட்டிலும் சற்று உயர்த்தப்படும். இருப்பினும் மாருதி சுஸுகி டிசைர், ஹூண்டாய் அவ்ரா, டாடா டிகோர் மற்றும் ஃபோர்டு அஸ்பியர் என இந்த ஹோண்டா காம்பெட் செடான் காருக்கான போட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
New honda amaze teased and bookings open
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X