ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

சிட்டி செடான் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்கும் திட்டத்தில் ஹோண்டா தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக ஹோண்டா எஸ்யூவி கார் ஒன்றை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருவதாக 2,3 வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டது போல் தோன்றினால், அது தவறில்லை. ஏனெனில் இவ்வாறான செய்திகள் கடந்த சில வருடங்களாகவே வெளியாகி வருகின்றன.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

இருப்பினும் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் அதன் அறிமுகங்களை தொடர்ந்து மாற்றி கொண்டே வருகிறது. இத்தனைக்கும் நொய்டாவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையில் இந்த நிறுவனத்தின் நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் ட்ரையல் தயாரிப்பு பணிகள் கூட துவங்கப்பட்டன.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

ஆனால் அதன்பின் கவர்ச்சியான விலையில் எம்ஜி ஹெக்டர் & ஹூண்டாய் செல்டோஸ் கார்கள் கொண்டுவரப்பட்டத்தினால் ஹோண்டா தனது முடிவை மாற்றி கொண்டது. ஏனெனில் ஹோண்டா தனது மிட்-சைஸ் எஸ்யூவி காரை தயாரிக்க பெரும்பாலான பாகங்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவர திட்டமிட்டது.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

இவ்வாறான முறையில் தயாரிக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்பு ஹோண்டா நடுத்தர-அளவு எஸ்யூவி கார் அறிமுகமாகி இருந்தால், அது ஹெக்டர் & செல்டோஸிற்கு முன்பு தாக்கு பிடித்து இருக்குமா என்பது சந்தேகமே.

முன்பு, ஹேட்ச்பேக் காரான அமேஸ் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் சப்-4 மீட்டர் எஸ்யூவியை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதிக போட்டியினால் இந்த திட்டத்தை ஹோண்டா கைவிட்டது.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

ஏனெனில் தற்சமயம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் கார் பிரிவாக காம்பெக்ட் எஸ்யூவி விளங்குகிறது. இந்த பிரிவில் மட்டும் 10 மாடல்கள் வெவ்வேறான தயாரிப்பு நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விரைவில் டாடாவின் எச்பிஎக்ஸ் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட மாடல் இணையவுள்ளது.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

இந்த வகையில் பார்த்தோமேயானால் ஹோண்டாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் 12வது மாடலாக விளங்க வேண்டியிருக்கும். இதனால் தான் சிட்டி செடான் காரின் அடிப்படையிலான நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் பக்கம் செல்ல ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

இரு விதமான அளவுகளில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக அதிக வேரியண்ட்களுடன் ஹோண்டாவின் இந்த புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார் கொண்டுவரப்படும்.

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில்!! ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக

இந்த நிலையில் எலெவேட் என்கிற பெயரை ஹோண்டா நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இந்த பெயர் அடுத்ததாக இந்தியாவில் களமிறக்கப்படும் இந்த ஜப்பானிய நிறுவனத்தின் நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கு பயன்படுத்தப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda has yet again planned to bring an SUV based on their Honda City platform. If this news looks familiar, you have probably heard this news two to three years back.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X