விற்பனைக்கு வந்தது புதிய இசுஸு வி க்ராஸ் ஆஃப்ரோடு மாடல்கள்... தோற்றத்தில் மட்டுமல்ல, விலையிலும் மிரட்டுகிறது

கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வில் இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

விற்பனைக்கு வந்தது புதிய இசுஸு வி க்ராஸ் ஆஃப்ரோடு மாடல்கள்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் இந்தியாவின் ஆஃப்ரோடு வாகன சந்தையில் மிக முக்கிய மாடலாகவும், தனித்துவமான தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப புதிய எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்கள்

புதிய இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் வாகனமானது டி மேக்ஸ் ஹைலேண்டர் என்ற விலை குறைவான மாடலிலும், அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட டி மேக்ஸ் வி க்ராஸ் என இரண்டு மாடல்களில் கிடைக்கும். இதில், ஹைலேண்டர் மாடலை தனிநபர் பயன்பாட்டு வாகனமாகவும், வியாபார விஷயங்களுக்காகவும் பயன்படுத்தும் அம்சங்கள் கொண்டது.

விற்பனைக்கு வந்தது புதிய இசுஸு வி க்ராஸ் ஆஃப்ரோடு மாடல்கள்!

பிரிமீயம் மாடல்

டி மேக்ஸ் வி க்ராஸ் மாடலானது தனிநபர் பயன்பாட்டு அம்சங்களை நிரம்ப பெற்றுள்ளது. இந்த மாடலானது இசட் மற்றும் இசட் பிரஸ்டீஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், இசட் வேரியண்ட் 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலும், இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்தது புதிய இசுஸு வி க்ராஸ்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த ஆஃப்ரோடு பயன்பாட்டு ரக வாகனத்தில் 4 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை 4 வீல் டிரைவ் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய டீசல் எஞ்சின்

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கிறது. வி க்ராஸ் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு வந்தது புதிய இசுஸு வி க்ராஸ் ஆஃப்ரோடு வாகனங்கள்

விலை விபரம்

புதிய இசுஸு டி மேக்ஸ் ஹை லேண்டர் வாகனத்திற்கு ரூ.16.98 லட்சம் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி மேக்ஸ் வி க்ராஸ் இசட் 2 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.19.98 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டி மேக்ஸ் வி க்ராஸ் இசட் 4 வீல் டிரைவ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.20.98 லட்சமும், 4 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.24.49 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Japanese vehicle maker, Isuzu has launched new D Max Highlander and updated V Cross pick truck models in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X