பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பவர்ஃபுல் பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பிஎஸ்-6 மாடல்

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பிரிமீயம் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி கடந்த 2017ம் ஆண்டு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, விற்பனை நிறுத்தப்பட்டது.

எஞ்சின் விபரம்

இதையடுத்து, தற்போது பிஎஸ்-6 எஞ்சின் தேர்வில் மீண்டும் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கும் புதிய 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இசுஸு எம்யூஎக்ஸ்

ஆஃப்ரோடு அம்சங்கள்

அத்துடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஸ்யூவியில் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் வந்துள்ளது. மேலும், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை மூலமாக 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை தேர்வு செய்யும் வசதியும் இருக்கிறது.

பரிமாணம்

இந்த எஸ்யூவியானது 4,825 மிமீ நீளமும், 1,860 மிமீ அகலமும், 1,840 உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த எஸ்யூவி 2,845 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இசுஸு எம்யூஎக்ஸ் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

புதிய இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் முகப்பு டிசைன் அம்சங்கள் இந்த மாடலிலும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், புதிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

வசதிகள்

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியில் வலிமையான தோற்றத்தை தரும் க்ரில் அமைப்பு, 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விலக்குகள், ரூஃப் ரெயில்கள், கிளாடிங் சட்டங்களுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விலை விபரம்

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.33.23 லட்சமும், 4 வீல் டிரைவ் வேரியண்ட்டிற்கு ரூ.35.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu has Launched MUX With BS6 compliant engine in India starting at Rs.33.23 lakh (Ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X