பென்ஸ் இக்யூசி காரை ஒரு கை பார்க்க வரும் புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார்... இந்திய அறிமுக தேதி வெளியீடு

ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு எழுந்துள்ளது. இதனை மனதில் வைத்து, ஜாகுவார் நிறுவனம் தனது ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் 9ந் தேதி தனது ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் நிறுவனம் தேதி குறித்துள்ளது.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் முதலே டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 90kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காருக்கு இரண்டு விதமான சார்ஜர்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், டாடா பவர் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 200 எலெக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் ஜாகுவார் ஐ-பேஸ் காருக்கு எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் சொகுசு எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி வெளியீடு!

புதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 80 விருதுகளை பெற்றிருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலானது நேரடியாக மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக அமையும். மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் வால்வோ வி40 எலெக்ட்ரிக், ஆடி இ-ட்ரான் மற்றும் டெஸ்லா கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar is all set to launch its first all-electric SUV, the I-Pace in the Indian market. The company will be launching the luxury electric-SUV on March 9, 2021. The launch will take place via a unique and immersive digital launch event, says Jaguar.
Story first published: Monday, February 8, 2021, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X