இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

செல்டோஸ் கிராவிட்டி எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

இது தொடர்பான கியா மோட்டார்ஸின் ட்விட்டர் பதிவில், புத்தகம் ஒன்றின் மீது ஆப்பிள் வைக்கப்பட்டு, 'ஏன்? என கேள்வி எழுப்பிய ஒருவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

இதில் இருந்து ஐசேக் நியூட்டனையும் அவர் கண்டுப்பிடித்த ஈர்ப்பு விசை (கிராவிட்டி) கோட்பாட்டையும் தான் கியா இந்தியா நிறுவனம் கூற வருவதை தெளிவாக அறிய முடிகிறது. இதன் மூலம் செல்டோஸின் கிராவிட்டி எடிசனை அறிமுகப்படுத்த கியா தயாராகுவது தெளிவாகிறது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

கியா செல்டோஸ் கிராவிட்டி எடிசனை பற்றி கூற வேண்டுமென்றால், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கியா கார் மாடலான செல்டோஸின் ஸ்பெஷல் எடிசனான இது தென் கொரிய சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

தோற்றத்தில் செல்டோஸை பெரிய அளவில் ஒத்திருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் புதிய முன்பக்க க்ரில், தனித்துவமான 18-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் பெரிய சறுக்கு தட்டு உள்ளிட்டவற்றை பெறுகிறது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

இவற்றுடன் சில பிரத்யேகமான நிறத்தேர்வுகள் மற்றும் கியாவின் புதிய பிராண்ட் லோகோ போன்றவற்றையும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் இந்திய சந்தைக்கு பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

செல்டோஸ் கிராவிட்டி எடிசனின் உட்புற கேபின் புதிய க்ரே-கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. செல்டோஸ் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், செல்டோஸில் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் கிராவிட்டி எடிசன் பெறுகிறது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

அதேபோல் இயந்திர பாகங்களில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுனிற்கு போட்டியாக கியா நிறுவனம் செல்டோஸ் கிராவிட்டி காரை கொண்டுவருகிறது.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

இருப்பினும் இந்த மறைமுக ட்விட்டை தவிர்த்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரையில் செல்டோஸ் கிராவிட்டியின் இந்தியா அறிமுகம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. நமக்கு தெரிந்த வரையில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறதா செல்டோஸ் கிராவிட்டி!! கியாவின் மறைமுகமான பதில்...

தற்சமயம் இந்தியாவில் மொத்த எஸ்யூவி கார்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 30.34 சதவீத பங்கை கொண்டுள்ள கியா செல்டோஸ் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 8,305 மற்றும் 9,869 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் விற்பனையாகும் காருக்கு அதன் ஸ்பெஷல் எடிசன் நிச்சயம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

Most Read Articles
English summary
New Kia Seltos Gravity Edition coming soon to India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X