2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

2021 கியா செல்டோஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

பிராண்டின் புதிய லோகோ உடன் புத்துணர்ச்சியாக்கப்பட்ட கியா செல்டோஸ் இந்த மே மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய லோகோ மட்டுமின்றி புதிய வசதிகளையும், இரு புதிய வேரியண்ட்களுடன் இந்த 2021 கார் பெற்று வந்துள்ளது.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

இதனால் முன்பை காட்டிலும் கொடுக்கும் பணத்திற்கு மேலும் ஏற்ற காராக செல்டோஸ் உருவெடுத்துள்ளது. இந்த கியா எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வசதிகள் என்னென்ன என்பதை ஏற்கனவே நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

இந்த நிலையில் தற்போது 2021 செல்டோஸ் காருடன் வழங்கப்படவுள்ள ஆக்ஸஸரீகளை கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆக்ஸஸரீகளில் பெரும்பான்மையானவை க்ரோம் அலங்காரங்களாகவே உள்ளன.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

ஏனெனில் கூடுதலாக பணத்தை சொலுத்துவதின் மூலம் ஹெட்லைட், முன்பக்க ஃபாக் விளக்குகள், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிக்களுக்கான மூடிகள், டெயில்லைட்கள், பின்பக்க ஒளி பிரதிப்பலிப்பான் மற்றும் கதவு கைப்பிடிகள் உள்பட ஏகப்பட்ட பாகங்களில் க்ரோம் தொடுதல்களை பெறலாம்.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

இத்தகைய க்ரோம் அலங்காரங்களுடன் பம்பரின் வளைவுகள் பாதுகாப்பான், சேறு தெறிப்பதை தடுப்பான், ஜன்னல் கண்ணாடிகளுக்கான ஓரங்கள், பக்கவாட்டு படிக்கட்டு, ஜம்பர் கேபிள் மற்றும் கதவுகளின் கீழ்பகுதியில் மோல்டிங் உள்ளிட்டவற்றையும் ஆக்ஸஸரீகளாக பெற முடியும்.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, மைக்ரோஃபைபர் துணி, பயோ ஷாம்பு & தூசி சுத்தப்படுத்துவான் முதலியவற்றுடன் கார் கவரையும் 2021 செல்டோஸிற்கு ஆக்ஸஸரீயாக கியா வழங்கியுள்ளது.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பதிற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கைகளுக்கு 9 விதமான நிறங்கள், வெவ்வேறு விதமான டிசைன்களுடன் வழங்கப்பட்டுள்ளன. கேபினிற்கான பாய்களை கம்பளத்திலோ அல்லது பிவிசி ஃபினிஷ் செய்யபட்டதாகவோ பெறலாம்.

2021 செல்டோஸ் காருக்கு ஆக்ஸஸரீகளை அறிவித்தது கியா!! கார் வாங்கும்முன் இதையும் தெரிஞ்சிக்கோங்க

கூடுதல் சவுகரியத்தை எதிர்பார்ப்பவர்களுக்காக குஷின்கள், கழுத்து & முதுகு பகுதிகளில் தலையணை, பின்பக்க பெரிய ஜன்னல் கண்ணாடிக்கான ஷேட் உள்ளிட்டவற்றுடன் பின் இருக்கை பயணிகளுக்கான அமைப்பு, சில் தட்டு, பின் கதவு அமைப்பு, குப்பை தொட்டி, மொபைல் சார்ஜர், டிஷ்யு பாக்ஸ் மற்றும் கார் வாசனை திரவியம் போன்றவற்றையும் ஆக்ஸஸரீயாக புதிய செல்டோஸ் காருடன் வாங்கலாம்.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
2021 Kia Seltos accessories detailed. Read Full Details In Tamil.
Story first published: Friday, May 21, 2021, 23:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X