மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுமையானத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சரியான விலையில் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, எஸ்யூவி வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரண்டு மாடல்களில் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஏஎக்ஸ் மாடலில் சில வேரியண்ட்டுகளை மஹிந்திரா நீக்கியது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

இந்த நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஆப்ஷனல் பெட்ரோல் வேரியண்ட்தான் இப்போது விலை குறைவான வேரியண்ட் தேர்வாக உள்ளது. இதன் விலை ரூ.11.90 லட்சத்தில் இருந்து ரூ.12.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

இதேபோன்று, ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் வேரியண்ட் விலை ரூ.12.20 லட்சத்திலிருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் மேனுவல் (Hardtop) மாடல் விலை ரூ.12.20 லட்சத்தில் இருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

அதேபோன்று, எல்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் ஹார்டு டாப் மாடல் ரூ.12.49 லட்சத்திலிருந்து ரூ.12.79 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்எக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட் விலை ரூ.13.55 லட்சத்திலிருந்து ரூ.13.95 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Variant New Price Old Price
AX (O) Petrol MT CT Rs12,10,337 Rs11,90,000
AX (O) Diesel MT CT Rs12,30,337 Rs12,10,000
AX (O) Diesel MT HT Rs12,40,337 Rs12,20,000
LX Petrol MT HT Rs12,79,337 Rs12,49,000
LX Diesel MT CT Rs13,15,336 Rs12,85,000
LX Diesel MT HT Rs13,25,337 Rs12,95,000
LX Petrol AT CT Rs13,85,337 Rs13,45,000
LX Petrol AT HT Rs13,95,336 Rs13,55,000
LX Diesel AT CT Rs14,05,336 Rs13,65,000
LX Diesel AT HT Rs14,15,338 Rs13,75,000
மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

தார் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனையில் இருக்கும் எல்எக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விலை ரூ.13.75 லட்சத்திலிருந்து ரூ.14.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்!

இந்த எஸ்யூவியில் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல் தொழில்நுட்பங்கள் நிரந்தர அம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles
--

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has updated the price list of its new-generation Thar SUV in the Indian market. The new Mahindra Thar prices have now been hiked between Rs 20,000 and Rs 40,000, across all variants.
Story first published: Monday, January 11, 2021, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X