மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

ஆஃப்-ரோடு பயணங்களை முக்கியமாக கருத்தில் கொண்டு தான் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் வடிவமைக்கப்படுகிறது. இதனால் எந்தவொரு சாலையிலும் இந்த மஹிந்திரா வாகனத்தை ஓட்டி பார்க்கலாம் என்கிற கருத்து பரவலாக உள்ளது.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

இத்தகைய திறன்களினாலும், புதிய தலைமுறை அப்கிரேட்களினாலும் 2020 தார் வாகனத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதன் ஆஃப்-ரோடு திறனிற்காகவே தாரை வாங்குகின்றனர்.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

இதனால் வாகனத்தை டெலிவிரி பெற்றவுடனே அதன் திறன்களை சோதிக்கவே உரிமையாளர்கள் பலர் விரும்புகின்றனர். இது தொடர்பான வீடியோக்களையும், படங்களை ஏகப்பட்டவைகளை இதற்கு முன் நமது செய்தியில் பார்த்துள்ளோம்.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி தனது தாரை குண்டும் குழியுமான ஆஃப்-ரோட்டில் இயக்கி பார்த்திருந்தார். அதேபோல் சிலர் தங்களது தாரை படிக்கட்டில் இறக்கி பார்த்தனர். இதன் தொடர்ச்சியாக சிலர் தங்களது தார் வாகனங்களில் ஓடும் ஆற்றை கடக்க முயற்சித்துள்ளனர்.

மஹிந்திரா தார் 4x4 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மெஹூல் ராஜ்வன்சி என்பவரால் பதிவிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவில் மூன்று மஹிந்திரா தார் வாகனங்களை பார்க்கலாம். இதில் கருப்பு நிற தார் ஒன்று முதலாவதாக ஆற்றில் இறக்கப்படுகிறது.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

பொதுவாக ஆற்றில் இறக்கப்படும் வாகனங்களில் ஸ்நோர்கெல் எனப்படும் என்ஜின் புகையை வெளியிடும் குழாய் முன்பக்கத்தில் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த தார் வாகனங்கள் எதிலிலும் அவ்வாறான பாகத்தை பார்க்க முடியவில்லை.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

அதேநேரம் ஆற்றில் இறக்கப்பட்ட கருப்பு நிற தார் சில ஆக்ஸஸர்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். புதிய தலைமுறை மஹிந்திரா தாரை அதிகப்பட்சமாக 650மிமீ வரையில் ஆழம் கொண்ட நீர் நிலைக்குள் இறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

மஹிந்திரா தாரில் 2.0 லிட்டர் எம் ஸ்டாலியோன் டிஜிடிஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 300 என்எம் டார்க் திறனையும், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

இதனுடன் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் என்ஜின் தேர்விலும் மஹிந்திரா தார் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தாரை ஆற்றுக்குள் இறக்கி பார்த்த உரிமையாளர்!! ஸ்நோர்கெல் இல்லாமல்... வீடியோ!

தற்சமயம் மஹிந்திரா தாரின் விலைகள் ரூ.12.10 லட்சத்தில் இருந்து ரூ.14.15 லட்சம் வரையில் உள்ளன. தாருக்கு விற்பனையில் நேரடி போட்டி எதுவும் தற்போதைக்கு இல்லை என்றாலும், விலையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Thar Takes A Water Wading Challenge Without A Snorkel.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X