புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணிடாதீங்க!

முதல்முறையாக சொகுசு கார் வாங்கும் கனவில் இருப்பவர்கள் மத்தியில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசைன், இன்டீரியர், வசதிகள், எஞ்சின், கியர்பாக்ஸ், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் இதனை ஒரு சமரசமில்லாத வகையில் கொடுக்க வேண்டும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் விரும்புகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சமரசமில்லாமல் நிறைவு செய்யும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. விலை குறைவான புதிய சொகுசு கார் வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று கூறலாம்.

இந்த காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின்: வீடியோ ரிவியூ!

இந்த கார் டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகளில் சிறப்பாக இருக்கிறது. வரும் 25ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முதல்முறையாக சொகுசு கார் வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை ஈர்க்கும் விலையில் இந்த கார் வந்தால், பெரிய வரவேற்பை பெறும் என்று கூற முடியும்.

Most Read Articles
English summary
Ahead of its arrival in India, we drove the 2021 Mercedes-Benz A-Class Limousine in Goa to check out its claims of being the longest-in-segment and also offering best-in-class cabin space. We got to drive both the petrol and diesel-powered variants of the sedan and were completely impressed with what it had to offer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X