புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி கார் இந்திய அறிமுகம் குறித்த பிரத்யேக தகவல் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலான ஜிஎல்ஏ காருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஜிஎல்ஏ எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு உண்டு. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கும் இந்த இரண்டாம் தலைமுறை ஜிஎல்ஏ எஸ்யூவி ஆரம்ப ரக சொகுசு கார் வாங்க திட்டமிட்டுள்ளோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த இந்த கார் ஒருவழியாக இந்தியாவில் களமிறங்க உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

மேலும், இந்த காரின் அறிமுகம் குறித்து எமக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரத்திலேயே புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் புதிய ஜிஎல்ஏ எஸ்யூவி முறைப்படி இந்திய சந்தையில் களமிறக்கப்பட உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

முந்தைய தலைமுறை மாடலைவிட தோற்றத்தில் மிகவும் வலிமையான மாடலாக புதிய ஜிஎல்ஏ சொகுசு கார் மாறி இருக்கிறது. கம்பீரமான பானட், 20 அங்குல அலாய் வீல்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்வேளை விளக்குகள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் தேர்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

இதன் 220டீ டீசல் எஞ்சினுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளதுடன், இந்த மாடலானது ஏஎம்ஜி வெர்ஷனில் வர இருக்கிறது. மேலும், டீசல் மாடலின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மாடலானது புராகிரெஸ்ஸிவ் என்ற வேரியண்ட்டில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் ரெனோ - நிஸான் கூட்டணியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் அறிமுகம் குறித்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி மாடலானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1, வால்வோ எக்ஸ்சி40, மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to our sources, Mercedes Benz GLA SUV will be launched in India by this week.
Story first published: Tuesday, April 20, 2021, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X