கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2021 மாடலாக வந்திருக்கும் புதிய ஜிஎல்சி காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதிக வசதிகளை சேர்த்து 2021 மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் களமிறக்கி உள்ளது. இந்த புதிய மாடலில் பிரில்லியண்ட் புளூ மற்றும் ஹை டெக் சில்வர் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

இந்த காரில் மிக முக்கிய அம்சமாக, 2020ம் ஆண்டு மாடலில் இருந்த அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு பதிலாக புதிய 12.3 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

மேலும், முன் இருக்கைக்கு மசாஜ் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதியை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக கட்டுப்படுத்த இயலும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் முன் இருக்கைக்கான மசாஜ் வசதியை நிரந்தரமாக தக்க வைத்துள்ள மாடல் ஜிஎல்சி கார் மட்டும்தான். பிற கார்களில் தனியாக இதனை கட்டணம் செலுத்தி பெறும் நிலை உள்ளது.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இ-சிம் கார்டு மூலமாக நேரடியாக இணைய வசதியை பெறுகிறது. இதன்மூலமாக, பல்வேறு கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகளை பெறுவதற்கான வாய்ப்பை கொடுக்கிறது. மேலும், ஆன்ட்ராய்டு ஃபோன்களின் வாய்ஸ் அசிஸ்ட் வசதி மூலமாக அமேஸான் அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் வாய்ஸ் கமாண்ட் மூலமாகவும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சில வசதிகளை கட்டுப்படுத்த முடியும்.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

இதற்காக, புதிய 'மெர்சிடிஸ் மி' என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பார்க்கிங் இடங்களை தெரிந்து கொள்வது, சன்ரூஃப் மற்றும் கதவுகளை மூடுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். மேலும், இந்த காரில் 360 டிகிரி கேமரா வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் மிக முக்கியமான வசதியாக அமைந்துள்ளது.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இதன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 194 எச்பி பவரையும் வழங்கும்.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

 கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு கார் அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.57.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும், டீசல் மாடலுக்கு ரூ.63.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மாடலை ஒப்பிடும்போது, பெட்ரோல் மாடல் விலை ரூ.1.56 லட்சமும், டீசல் மாடல் விலை ரூ.2.02 லட்சம் வரையிலும் அதிகரித்துவிட்டது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has launched new GLC SUV in India with more premium features.
Story first published: Wednesday, January 20, 2021, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X